Page Loader
இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 26, 2022
02:12 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தற்போது 6 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ,முதலில் 'ரயில் 18' என்று தான் பெயரிடப்பட்டது. பின்னர், ரயில்வே துறை அமைச்சரால், 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என்று மறுபெயரிடப்பட்டது. காரணம், இந்த ரயில் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருந்ததால், ரயில் 18 என்று காரணப்பெயர் வைத்திருந்தனர். ஆனால், இந்த ரயில் பிப்ரவரி 15, 2019 அன்று இந்தியப் பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது. சென்னையில் உள்ள ICF ல் வடிவமைக்கப்பட்டு, 97 கோடி ரூபாய் செலவில், சுமார் 18 மாதங்களில் தயார் செய்யப்பட்டது. பெரும்பாலான ஊடக செய்திகளின் படி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியாவில் முதல் அதிவேக ரயில் அல்ல. மூன்றாவது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

VB1, VB2, VB3 மற்றும் VB4 என்ற பெயரில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் நான்கு பதிப்புகள் உள்ளன. எனினும், VB1 மற்றும் VB2 ஆகியவை மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இதில், VB1 பதிப்பின் வேகத்திறன் 180 kmph ஆகும். எனினும், தற்போது இந்த VB1 மணிக்கு 130 கி.மீ.வேகத்தில் தான் இயக்கப்படுகிறது. VB2 பதிப்பு, VB1 ஐ விட 4 வினாடிகளில் வேகமாகச் செல்லும் திறன் கொண்டது. இதன் இயக்க வேகமும் 130 kmph ஆக குறைக்க பட்டுள்ளது. மேலும், சென்னை-மைசூர் வழித்தடத்தில், 110 kmph ஆக இயக்கப்படுகிறது. வரவிருக்கும், VB3, VB4 பதிப்புகள், மணிக்கு 180-200 கிமீ வேகத்தில் இருக்கும் எனவும், இது ஸ்லீப்பர் கோச்சுகளைக் கொண்டிருக்கும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.