NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு
    ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்.. உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு

    ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 04, 2023
    03:05 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நவம்பர் 28ம் தேதி முதல் இந்தியப் பங்குச்சந்தைகளில் அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 5.6 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்திருக்கிறது.

    தற்போது உலகளவில் 65.8 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன், 20வது இடத்தில் இடம்பெற்றிருக்கிறார் கவுதம் அதானி.

    மேலும், நேற்று மூன்று மாநில தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையடுத்து, இன்று (டிசம்பர் 4) இந்திய பங்குச்சந்தைக் குறியீடுகள் புதிய உச்சத்தை எட்டின. அதே போல், அதானி குழும பங்களும் அதிகபட்சமாக 15% வரை ஏற்றத்தைச் சந்தித்திருக்கின்றன.

    அதானி

    அதானி - ஹின்டன்பர்க் பிரச்சினை: 

    இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹின்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், அதானி குழுமம் மீதான அறிக்கை ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

    இதனால் 55 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை இழந்ததோடு, உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார் அவர்.

    இதனைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் மீதான விசாரணைக்குக் கோரி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் முடிவடைந்தது.

    இந்த வழக்கில் அதானி குழுமத்திற்கு சாதகமான தீர்ப்பே எதிர்பார்க்கப்படும் நிலையில், அக்குழுமப் பங்குகள் ஏற்றத்தில் இருக்கின்றன. தற்போது தேர்தல் முடிவுகளும் அதற்கு கூடுதல் வலுசேர்த்திருக்கிறது.

    பங்குச்சந்தை

    உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள்: 

    இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் 10% வரை ஏற்றம் கண்டது அதானி எண்டர்பிரைசஸ் பங்கு. தற்போது 3 மணி நிலவரப்படி சற்று இறக்கம் கண்டு, மொத்தமாக 7.33% ஏற்றத்துடன் ரூ.2,536 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.

    அதே போல், அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனப் பங்குகள் இன்று காலை வர்த்தகம் தொடங்கிவுடன் 15% வரை ஏற்றம் கண்ட நிலையில், 3 மணி நிலவரப்படி 9.16% ஏற்றத்துடன் ரூ.1,120.55 என்ற விலையில் வர்த்தகமாகி வருகின்றது.

    அதானி பவர் நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தக நாளில், 3 மணி நிலவரப்படி 5.59% ஏற்றம் கண்டு ரூ.465 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதானி
    பங்குச் சந்தை
    வணிகம்

    சமீபத்திய

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் டிரக்கை அறிமுகப்படுத்தியது அதானி; சிறப்பம்சங்கள் என்ன? அதானி
    இனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங் நரேந்திர மோடி
    ராவல்பிண்டி வரை எதிரொலித்த இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு ராஜ்நாத் சிங்
    '2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம் பாகிஸ்தான்

    அதானி

    கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி
    மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி பிரதமர்
    பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள் பங்குச் சந்தை

    பங்குச் சந்தை

    அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC இந்தியா
    அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர் இந்தியா
    அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!  முதலீடு

    வணிகம்

    'மறுசீரமைப்பு' திவால் நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க ஸ்டார்ட்அப்பான வீவொர்க்  அமெரிக்கா
    வோல்டாஸின் வீட்டு உபயோகப் பொருட்கள் வணிகத்தை விற்பனை செய்யும் டாடா? டாடா
    2026ம் ஆண்டிற்குள் இந்தியாவிலும் பறக்கும் டாக்ஸி சேவை: இண்டிகோவின் தாய் நிறுவனம் திட்டம் இந்தியா
    'பைஜுஸ் ஆஃல்பா' ஹோல்டிங் நிறுவனத்தை, கடன் வழங்கிய நிறுவனங்களிடம் இழந்த பைஜூஸ் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025