அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன?
அமெரிக்கா ஹின்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அதானி குழுமம் ஒரு நாள் ஏற்றத்துக்கு பின்னர் இன்று மீண்டும் சரிவை கண்டுள்ளது. இதனிடையே, பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமான வணிகத்துக்கு இடையே, அதானி குழுமத்தின் எட்டு நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளும் வியாழக்கிழமை காலை சரிவுடனேயே வணிகமாகி வருகிறது. MSCI குறியீடு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் அதானி குழுமத்தின் சில செக்யூரிட்டிகள் ப்ரீ ப்ளோட் தகுதி பெற்ற கூடாது என்றும், இதன் தகுதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இவர்களின் MSCI அறிவிப்பால், அதானி குழுமம் சரியத்தொடங்கி இருக்கிறது. அதன்படி, அதானி என்டர்பிரைசஸ் பங்கின் விலை 7323 புள்ளிகள் குறைந்து 1,834-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதானி பங்குகள் மீண்டும் சரியத்தொடங்கியுள்ளது - காரணம் என்ன?
அதானி போர்ட்ஸ் நிறுவன பங்கு விலை ரூ.44 குறைந்து ரூ.554 இல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.9 குறைந்து ரூ.172 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், அதானி டிரான்ஸ்மின் பங்கு விலை ரூ.65 குறைந்து ரூ.1,248 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை ரூ.38 சரிந்து ரூ.763 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. டோட்டல் கேஸ் பங்கு ரூ.69 சரிந்து ரூ.1,324 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.3 குறைந்து ரூ.415 ஆக வீழ்ச்சியுடன் வணிகமாகி வருகிறது.