இது அதானியின் பிரச்சனை, இந்தியாவுக்கு இல்லை - மார்க் மோபியஸ் நம்பிக்கை!
அதானி குழுமம் ஹிண்டன்பர்க்கின் ஒற்றை அறிவிப்பால் பெரும் சரிவை கண்டு வருகிறது. உலக பணக்கார பட்டியலில் 22வது இடத்திற்கு கெளதம் அதானி தள்ளப்பட்டார். இந்நிலையில், வளர்ந்து வரும் சந்தை முதலீட்டாளர் மார்க் மொபியஸ் அதானி பற்றி தெரிவிக்கையில், "இது ஒரு அதானி பிரச்சினை" எனக்கூறியுள்ளார். மேலும், அதானி நிறுவனங்களில் நாங்கள் ஆர்வம் காட்டவில்லை, ஏனெனில் அவை எங்கள் முதலீட்டு அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை, குறிப்பாக கடனைப் பொறுத்தவரை. ஏராளமான திறமைகள் மற்றும் சிறந்த நிறுவனங்களுடன், இந்தியா அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது, எந்தவொரு சந்தை ஏற்ற இறக்கமும் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். இந்திய பங்குச் சந்தை குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக" தெரிவித்துள்ளார்.