Page Loader
அதானி குழுமம் போல் 17 நிறுவனங்களை காலி செய்த ஹிண்டன்பர்க்!
அதானி குழுமம் போல் 17 நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம்

அதானி குழுமம் போல் 17 நிறுவனங்களை காலி செய்த ஹிண்டன்பர்க்!

எழுதியவர் Siranjeevi
Feb 06, 2023
07:34 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஒற்றை அறிக்கையில் அதானி குழுமம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஹிண்டன்பர்க் எழுப்பிய 88 கேள்விகளில் மிகவும் முக்கியமான 62 கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தது. இதனால் கெளதம் அதானி உலகப்பணக்காரர்கள் பட்டியலில் 22வது இடத்துக்கே தள்ளப்பட்டார். இந்நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி மட்டுமல்ல இதற்கு முன்பு 17 நிறுவனங்களின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி இருக்கிறது. 1. செப்டம்பர் 2020-நிகோலா 2.ஜூன் 2020- வின் பைனான்ஸ் 3.ஜூன் 2020-ஜீனியஸ் பிராண்டுகள் 4.மே 2020-சீனா மெட்டல் ரிசோர்சஸ் யூடிலைசேஷன் நிறுவனம் 5.ஏப்ரல் 2020-எஸ்சி வொர்க்ஸ் 6.மார்ச் 2020-Predictive Technology Group 7. மார்ச் 2020- HF புட்ஸ்

ஹிண்டன்பர்க்

17 நிறுவனங்களை காலி செய்த ஹிண்டன்பர்க்கின் லிஸ்ட் இங்கே

8. அக்டோபர் 2019- ஸ்மைல் டைரக்ட் கிளப் 9. செப்டம்பர் 2019-புளூம் எனர்ஜி 10. டிசம்பர் 2018-யாங்சே நதி துறைமுகம் & தளவாடங்கள் 11. டிசம்பர் 2018-லிபர்ட்டி ஹெல்த் சயின்சஸ் 12. டிசம்பர் 2018- அப்ரியா 13. டிசம்பர் 2017- கலவர பிளாக்செயின் 14. டிசம்பர் 2017-Polarity TE 15. நவம்பர் 2017- ஒப்கோ ஹெல்த் 16. நவம்பர் 2017- பெர்ஷிங் தங்கம். 17. 2016- RD லீகல் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆண்டர்சன் மேற்கண்ட 17 நிறுவனங்களின் முறைகேடுகளை ஆதாரப்பூர்வமாக அறிக்கையாக சமர்ப்பித்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இந்நிறுவனங்கள், ஆரம்பத்தில் அதானி நிறுவனம் போல் குற்றச்சாட்டை மறுத்தாலும், 17 நிறுவனங்களும் மிகப் பெரிய சரிவை சந்தித்து இருக்கின்றன.