ஒரே ஒரு அறிக்கையால் 22வது இடம்! கெளதம் அதானி அடைந்த முக்கிய வீழ்ச்சிகள்;
அதானி குழுமம் பெரும் சரிவைக்கண்டு வரும் நிலையில், அவரின் மிக்பெரிய சரிவின் 6 முக்கியமான காரணத்தை தெரிந்துகொள்வோம். அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், பங்குச் சந்தையில் தன் நிறுவனப் பங்குகளின் மதிப்பை அதிகரிக்க அதானி குழுமம் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு, குறித்து ஹிண்டன்பர்க் எழுப்பிய 88 கேள்விகளில் மிகவும் முக்கியமான 62 கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தது. சரிவுக்கு காரணம் என்ன? உலக பணக்கார பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கெளதம் அதானி, அறிக்கைக்கு பின்னர் 22வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதேப்போல், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக வலம் வந்த கெளதம் அதானி தற்போது, அவருடைய பங்குகள் தொடர்ந்து சரிந்து பட்டத்தை இழந்துள்ளார்.
ஹிண்டன்பர்க் அறிக்கையால் வீழ்ந்த கெளதம் அதானி - முக்கிய காரணங்கள்
மேலும், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 30 சதவிகிதம் சரிந்து 28 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பில் 3.9 லட்சம் கோடி இழந்துள்ளார். அதானி குழுமத்தின் கடன் பத்திரங்களை அடமானமாக ஏற்றுக்கொள்ள முடியாது என சில வங்கிகள் அறிவித்துள்ளன. 130 பில்லியன் டாலருக்கு அதிகமான சொத்துக்களை வைத்து இருந்த அதானியின் பங்குகள் அப்படியே பாதியாக குறைந்துள்ளது. அதானி குழுமம் இதுவரை சந்திக்காத மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார். எனவே, 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.