
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை படைத்த சாய் சுதர்சன்
செய்தி முன்னோட்டம்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன், புதன்கிழமை (ஏப்ரல் 9) நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து தனது சிறப்பான ஐபிஎல் ஃபார்மைத் தொடர்ந்தார்.
எட்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் கொண்ட அவரது இன்னிங்ஸ் மூலம், குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 217/6 என்ற மிகப்பெரிய ஸ்கோரைப் பெற உதவியது.
இதற்கிடையே, இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம், சாய் சுதர்சன் தற்போது 30 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 1,307 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 30 இன்னிங்ஸ் முடிவில் எந்தவொரு இந்திய வீரரையும் விட அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றுள்ளார்.
50+ ஸ்கோர்
ஒரே மைதானத்தில் தொடர்நது ஐந்து 50+ ஸ்கோர்கள்
ஒட்டுமொத்தமாக, ஐபிஎல்லில் 30 இன்னிங்ஸ் முடிவில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை ஷான் மார்ஷ் கொண்டுள்ளார். அவர் 1,338 ரன்கள் எடுத்துள்ளார்.
கிறிஸ் கெய்ல், கேன் வில்லியம்சன் மற்றும் மேத்யூ ஹேடன் போன்ற முக்கிய வீரர்கள் முன்னர் அடுத்தடுத்து இருந்த நிலையில், அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளார்.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் ஒரே மைதானத்தில் தொடர்ச்சியாக ஐந்து முறை 50+ ரன்களை எடுத்த ஒரே இந்தியர் என்ற சாதனையையும் சாய் சுதர்சன் பெற்றுள்ளார்.
இந்த சீசனில் அகமதாபாத் மைதானத்தில் நடந்த தனது முந்தைய ஆட்டங்களில், சுதர்சன் 84* ரன்களையும் ஒரு சதத்தையும் எடுத்துள்ளார்.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை இறுதியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.