
175+ டார்கெட்னா நமக்கு அலர்ஜிங்க; சிஎஸ்கேவுக்கு இப்படியொரு சோக பின்னணி இருக்கா?
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (மார்ச் 29) வரையிலான போட்டி முடிவுகளின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியில்ல நிலையில், இரண்டையும் அதன் உள்ளூர் மைதானமான சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்திலேயே விளையாடியது.
இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஞாயிற்றுக்கிழமை குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தனது மூன்றாவது போட்டியில் விளையாட உள்ளது.
இந்நிலையில், 2021 சீசனுக்கு சேஸிங்கில் சிஎஸ்கே அணி சொதப்பி வருவது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.
175+ இலக்கு
175+ இலக்கை வெல்ல முடியாமல் தவிப்பு
ஐபிஎல்லில் 5 பட்டங்களுடன் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் இருந்தாலும், போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்து 175+ இலக்கை எதிர்கொள்ள கடந்த பல சீசன்களில் தடுமாறியே வந்துள்ளது.
இது நடப்பு சீசனில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்தது. இந்த போட்டியில் 197 ரன்கள் இலக்கு இருந்த நிலையில், அதை எட்ட முடியாமல் தோற்றது.
மேலும், முந்தைய சீசன்களில் 2024இல் 3 போட்டிகள், 2023இல் 2 போட்டிகள், 2022இல் 2 போட்டிகளில் 175+ டார்கெட் இருந்த நிலையில், அந்த அனைத்து போட்டிகளிலும் தோற்றது.
அதிர்ஷ்டவசமாக 2021 ஐபிஎல்லில் சேஸிங்கில் ஒரு போட்டியில் கூட 175+ டார்கெட் சிஎஸ்கேவிற்கு இல்லை.
ஐபிஎல்
ஐபிஎல் 2018-2020 சீசன்கள்
ஐபிஎல் 2020 சீசனில் 3 போட்டிகளில் சேஸிங்கில் 175+ ஸ்கோர் இருந்த நிலையில், அதில் இரண்டு போட்டிகளில் தோற்ற நிலையில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.
அதே நேரத்தில் 2019 சீசனில் ஒரே ஒரு போட்டியில் 175+ ஸ்கோர் டார்கெட் இருந்த நிலையில், அதை வென்றது.
2018 ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாக 5 போட்டிகளில் சேஸிங்கில் 175+ டார்கெட்டை எதிர்கொண்ட சிஎஸ்கே அதில் 4 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் கண்டுள்ளது.
இதை வைத்துப் பார்க்கையில், கடந்த பல சீசன்களாகவே சிஎஸ்கே அணி சேஸிங்கின்போது 175+ டார்க்கெட்டை எதிர்கொள்ள தடுமாறி வருவதை புரிந்துகொள்ள முடிகிறது.