NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஆர்சிபி: 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆர்சிபி அணியின் விளையாடும் லெவனில் புவனேஸ்வர் குமார்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஆர்சிபி: 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆர்சிபி அணியின் விளையாடும் லெவனில் புவனேஸ்வர் குமார்
    15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆர்சிபி அணியின் விளையாடும் லெவனில் புவனேஸ்வர் குமார்

    ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஆர்சிபி: 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆர்சிபி அணியின் விளையாடும் லெவனில் புவனேஸ்வர் குமார்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 28, 2025
    08:03 pm

    செய்தி முன்னோட்டம்

    வெள்ளிக்கிழமை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் ஐபிஎல் 2025 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியில் முந்தைய போட்டியில் விளையாடாத மதீஷா பத்திரனா, விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டார்.

    இதற்கிடையே, குறிப்பிடத்தக்க வகையில் ஆர்சிபி அணியில் கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார் நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் விளையாடுகிறார்.

    அவர் முந்தைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாத நிலையில், இந்த போட்டியில் விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஏலம்

    அதிக தொகைக்கு வாங்கப்பட்ட புவனேஸ்வர் குமார்

    அனுபவமிக்க இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி அணியில் திரும்பினார்.

    ஏலத்தில் அவரை வாங்க பலரும் போட்டிபோட்ட நிலையில், ₹10.75 கோடிக்கு ஆர்சிபியால் புவனேஸ்வர் குமார் வாங்கப்பட்டார். கடைசியாக 2010 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் ஆர்சிபி அணிக்காக ஒரே ஒரு போட்டியில் விளையாடினார்.

    ஆனால் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல்லில் ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை.

    ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், கடந்த போட்டியில் அணியின் வலுவான பந்துவீச்சு மறுபிரவேசத்தையும், நிலைத்தன்மையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி, வரவிருக்கும் சவாலை ஒப்புக்கொண்டார்.

    இதற்கிடையில், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆடுகள நிலைமைகள் மற்றும் களத்தில் மிகவும் ஆக்ரோஷமான அணுகுமுறைக்கான விருப்பத்தை மேற்கோள் காட்டி, முதலில் பந்துவீசும் முடிவை அறிவித்தார்.

    விளையாடும் லெவன்

    விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல்

    சிஎஸ்கே: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது.

    ஆர்சிபி: விராட் கோலி, பிலிப் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.

    இம்பாக்ட் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    சிஎஸ்கே: சிவம் துபே, கமலேஷ் நாகர்கோடி, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், ஷேக் ரஷீத்.

    ஆர்சிபி: சுயாஷ் சர்மா, ரசிக் தார் சலாம், ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங், மனோஜ் பந்தேஜ்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    டி20 கிரிக்கெட்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ஐபிஎல் 2023 : வர்ணனையாளர் அவதாரம் எடுக்கும் ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ்! ஐபிஎல்
    விராட் கோலியுடனான மோதல் குறித்து முதல் முறையாக மனம் திறந்த கவுதம் கம்பீர் விராட் கோலி
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ஃப்ளவர் நியமனம் ஐபிஎல்
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் எக்ஸ் கணக்கு திடீர் முடக்கம்; பின்னணி என்ன? ட்விட்டர்

    ஐபிஎல் 2025

    ஐபிஎல்லுக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக்கை புறக்கணிக்கும் தென்னாப்பிரிக்க வீரருக்கு லீகல் நோட்டீஸ்; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை ஐபிஎல்
    ஐபிஎல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்; ஜியோஹாட்ஸ்டார் புதிய சலுகை அறிவிப்பு ஜியோஹாட்ஸ்டார்
    ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; தோனி உள்ளிட்ட எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை படைக்கும் அஜிங்க்யா ரஹானே அஜிங்க்யா ரஹானே
    ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் நியமனம் டெல்லி கேப்பிடல்ஸ்

    ஐபிஎல்

    ஐபிஎல்லில் அதிக பரிசுத்தொகை வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸஸா? மும்பை இந்தியன்ஸா? ஐபிஎல் 2025
    CSK vs MI ஐபிஎல் 2025 டிக்கெட் விவரங்கள்: விற்பனை தேதி, எப்படி முன்பதிவு செய்வது எனத்தெரிந்து கொள்ளுங்கள் ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025: CSK vs MI போட்டிக்கான டிக்கெட் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணிக்கு திரும்பும் அஸ்வின் இந்த சாதனைகளை முறியடிக்கூடும் அஸ்வின் ரவிச்சந்திரன்

    டி20 கிரிக்கெட்

    ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியில் காயமடைந்த கசன்ஃபருக்கு பதிலாக முஜீப்-உர்-ரஹ்மான் சேர்ப்பு மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல் 2025: மார்ச் 22இல் முதல் போட்டி; கொல்கத்தா ஈடன் கார்டனில் இறுதிப்போட்டி; விரிவான போட்டி அட்டவணை ஐபிஎல் 2025
    சிஎஸ்கே அணியில் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக இணையும் மண்ணின் மைந்தன்; யார் இந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம்? சென்னை சூப்பர் கிங்ஸ்
    மகளிர் ஐபிஎல் 2025: ஸ்ட்ரைக் ரேட்டில் மோசமான சாதனை ஆர்சி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஸ்மிருதி மந்தனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025