Page Loader
'தோனியை வெறுக்கணும்னா பிசாசாக இருந்தால் தான் சாத்தியம்' : ஹர்திக் பாண்டியா
தான் எப்போதும் தோனியின் ரசிகன் என கூறிய ஹர்திக் பாண்டியா

'தோனியை வெறுக்கணும்னா பிசாசாக இருந்தால் தான் சாத்தியம்' : ஹர்திக் பாண்டியா

எழுதியவர் Sekar Chinnappan
May 23, 2023
05:29 pm

செய்தி முன்னோட்டம்

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தான் எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனியின் பரம ரசிகன் என தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2023 தொடரின் முதல் குவாலிஃபையர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 23) மோதுகின்றன. இந்நிலையில் பாண்டியா தோனி குறித்து பேசியுள்ள வீடியோவை குஜராத் டைட்டன்ஸ் அணி பகிர்ந்துள்ளது. அதில், "நிறைய பேர் மஹியை சீரியஸ் என்று நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, அவர் அதிக நகைச்சுவை உணர்வு கொண்ட நபர். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். நான் எப்போதுமே எம்எஸ் தோனியின் ரசிகன். தோனியை வெறுக்க வேண்டுமானால் நீங்கள் முழு பிசாசாக இருக்க வேண்டும்." என்று கூறினார்.

embed

Twitter Post

Captain. Leader. Legend.@msdhoni is an emotion