
ரன் மெஷின் சன்ரைசர்ஸை முடக்கிய எல்எஸ்ஜியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்; யார் இந்த பிரின்ஸ் யாதவ்?
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் வியாழக்கிழமை (மார்ச் 27) நடைபெற்ற ஏழாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியிடம் வீழ்ந்தது.
எல்எஸ்ஜி அணியில் ஷர்துல் தாக்கூர் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தினார்.
டிராவிஸ் ஹெட்டை அவுட் செய்த பிரின்ஸ் யாதவ் 4 ஓவர்கள் பந்துவீசி 7.20 என்ற எகானாமியில் வெறும் 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ரன் மெசின்களான சன்ரைசர்ஸ் வீரர்களை கட்டுப்படுத்தினர்.
இதனால் எஸ்ஆர்எச் 20 ஓவரில் 190/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னணி
பிரின்ஸ் யாதவின் பின்னணி
டெல்லி பிரீமியர் லீக் மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் சிறப்பாக விளையாடி, டெல்லியைச் சேர்ந்த 23 வயதே ஆன வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இவரது திறமையை சரியாக அடையாளம் கண்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்தில் 30 லட்ச ரூபாய்க்கு அவரை வாங்கியது.
இந்நிலையில், அவர் தனது தகுதியை போட்டியின் மூலம் நிரூபித்துள்ளார்.
இதற்கிடையே, இரண்டாவது பேட்டிங் செய்த எல்எஸ்ஜி நிக்கோலஸ் பூரன் (70 ரன்கள்) மற்றும் மிட்செல் மார்ஷ் (52 ரன்கள்) அதிரடியில் 16.1 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.