ஐபிஎல் 2023 : லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய பவுலர்கள்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 சீசனில் பேட்ஸ்மேன்கள் பலர் சிறப்பாக செயல்பட்ட நிலையில், பல சிறந்த பந்துவீச்சுகளையும் கண்டுள்ளது.
லீக் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷமி 14 போட்டிகளில் 7.70 என்ற எகானாமியில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் தொப்பிக்கான பந்தயத்தில் முன்னிலையில் உள்ளார்.
இதில் 15 விக்கெட்டுகளை பவர்பிளேயில் மட்டுமே வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது எந்த ஒரு பந்து வீச்சாளராலும் இதுவரை எட்டாத அளவிற்கு மிக அதிகமானது. மேலும் இந்த சீசனில் அதிக டாட் பால்களையும் வீசியவர் (172 பால்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.
csk bowlers best performance
முதல் ஹாட்ட்ரிக்கை பதிவு செய்த ரஷீத் கான்
ஷமியைப் போலவே, மற்றொரு குஜராத் டைட்டன்ஸ் அணியின் மற்றொரு வீரரான ரஷீத் கான் இந்த சீசனில் 7.82 எகானாமியுடன் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கேகேஆர் ஆட்டத்திற்கு எதிரான போட்டியில் அவர் தனது முதல் ஐபிஎல் ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்தார். மிடில் ஓவர்களில் (7-16) 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதற்கிடையே யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை இந்த சீசனில் செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பியூஷ் சாவ்லா 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதோடு, இந்த சீசனில் மிடில் ஓவர்களில் (18) அதிக விக்கெட் வீழ்த்தியவராக உள்ளார்.
இவர்கள் தவிர துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, வருண் சக்ரவர்த்தி போன்ற இளம் வீரர்களும் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர்.