
ஐபிஎல் 2025: ஹர்திக் பாண்டியா - சாய் கிஷோர் இடையே மோதல்; இறுதியில் நடந்த ட்விஸ்ட்
செய்தி முன்னோட்டம்
மார்ச் 29 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணி மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) ணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் மும்பை கேப்டன் ஹார்டிக் பாண்ட்யா மற்றும் ஜிடி பந்துவீச்சாளர் ஆர் சாய் கிஷோர் இடையே ஒரு சிறிய சூடான மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக எம்ஐ டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது.
ஜிடி அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் 41 பந்துகளில் 63 ரன்களுடன் முக்கிய பங்கு வகித்தார்.
மும்பை தடுமாற்றம்
மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாற்றம்
197 ரன்களை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்திலேயே தடுமாறி, முக்கிய விக்கெட்டுகளை இழந்து, அதிகரித்து வரும் ரன் விகிதத்தை தக்க வைத்துக் கொள்ள போராடியது.
20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பை அணியின் இன்னிங்ஸின் 15வது ஓவரில், ஹர்திக் ஒரு பந்தை பவுண்டரிக்கு அடித்த பிறகு, சாய் கிஷோரும் ஹர்திக் பாண்டியாவும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டதால் பதற்றம் அதிகரித்தது.
ஹர்திக் கிஷோரை நோக்கி முன்னேறியதால் நிலைமை மேலும் தீவிரமடைந்தது. எனினும், நடுவர்கள் தலையிட்டு அமைதிப்படுத்தினர்.
இருப்பினும், போட்டிக்குப் பின்னர் இதையெல்லாம் மறந்துவிட்டு, இரு வீரர்களும் கட்டிப்பிடித்து சமரசம் செய்து கொண்டனர்.