
போப் ஆண்டவர் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும்: தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
போப் பிரான்சிஸ் மரணத்தைத் தொடர்ந்து, இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) நேற்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.
இரட்டை நிமோனியாவால் ஏற்பட்ட சுவாசத் தொந்தரவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், சில நாட்களுக்கு முன்னர் தான் வீடு திரும்பியிருந்தார்.
எனினும் நேற்று காலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் தற்போது வாடிகனில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustNow | போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.#SunNews | #RIPPopeFrancis | #PopeFrancis | #TNGovt https://t.co/xsrAm8Efn6 pic.twitter.com/FayHXswmrx
— Sun News (@sunnewstamil) April 22, 2025
இறுதி சடங்கு
போப் பிரான்சிஸின் கல்லறை மரியா மேஜியர் பசிலிக்காவில் வைக்கப்படும்
செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா இல்லாமல், ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேஜியர் பசிலிக்காவில் தன் கல்லறையை அமைக்க விரும்பியதாக கூறப்படுகிறது.
இதனால், 100 ஆண்டுகளுக்கு பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்படவுள்ள முதல் போப்பாக இவர் வரலாற்றில் இடம்பெருகிறார்.
இந்நிலையில், போப்பின் மறைவைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இன்று மற்றும் நாளை மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
மரியாதையின் அடிப்படையில், இரண்டு நாட்களும் எந்தவொரு கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், மத்திய அரசும் மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அனுசரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நாளில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் ஏற்றப்படும்.