பாலியல் வழக்குகளுக்கு தண்டனையை கடுமையாகும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட சட்ட மசோதாவை, முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
புதிய சட்ட திருத்தத்தில், சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கான பாலியல் வன்கொடுமைக்கு தூக்குத் தண்டனை, பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் தாக்குதல் மேற்கொண்டால் 3 முதல் 5 ஆண்டுகள் சிறை, பெண்ணை பின்தொடர்வதற்கு ஐந்து வருட சிறை முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை, ஆசிட் பயன்படுத்தி காயம் ஏற்படுத்தினால் ஆயுள் தண்டனை அல்லது தூக்கு போன்ற ஆகிய தண்டனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
ஒப்புதல்
சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுக்கு பின்னர் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது
முதல்வர் ஸ்டாலின் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்ததும், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று ஆளுநர் ஆர்.என். ரவி சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அடுத்தகட்டமாக இந்த மசோதா, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவர் ஒப்புதல் கிடைத்த பின்னர் இந்த மசோதா சட்டமாகும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்#SunNews | #TNGovt | #RNRavi pic.twitter.com/rpiTcltXWc
— Sun News (@sunnewstamil) January 23, 2025