பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை; சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர்
செய்தி முன்னோட்டம்
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் சட்ட திருத்த மசோதாவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதா குறிப்பாக பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 14 ஆண்டுகளுக்கு கடுங்காவல் தண்டனை அளிப்பதை நோக்கமாக கொண்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர், "பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த சட்ட திருத்தம்" என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை.. சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் #SunNews | #TNAssembly | #CMMKStalin | @mkstalin pic.twitter.com/XwZP5Bb2Ls
— Sun News (@sunnewstamil) January 10, 2025
முக்கிய அம்சங்கள்
இன்று அறிமுகம் செய்யப்பட்ட சட்ட திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்
பெண்ணை பின் தொடர்ந்தால், 5 ஆண்டுகள் வரை ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் சிறை தண்டனை
கூட்டு பலாத்காரம், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தல் போன்ற குற்றங்களுக்கு ஆயுள் சிறை தண்டனை.
நெருங்கிய உறவினர்களால் அல்லது அதிகாரம் வாய்ந்தவர்களால் பலாத்காரம் செய்தல் போன்ற குற்றங்களுக்கு ஆயுள் சிறை தண்டனை.
குறிப்பிட்ட குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளிப்படுத்தினால், 3 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை.
ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை.
பாலியல் வன்கொடுமை வழக்கில், 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை.
மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால், ஆயுள் அல்லது மரண தண்டனை.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை அதிகரிப்பு.. சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சட்ட திருத்தங்கள்..!#SunNews | #CMMKStalin | #TNAssembly | #WomenSafety | @mkstalin pic.twitter.com/ZI3Cpf2jK9
— Sun News (@sunnewstamil) January 10, 2025