
தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, இதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, ஜூலை 2 (புதன்) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். ஜூலை 3 மற்றும் 4 வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஜூலை 5 முதல் 7 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை
வெப்பநிலை நிலவரம்
வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஜூலை 1 மற்றும் 2 ஆம் தேதிகளில், தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிதாக மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் சில இடங்களில் இயல்பு நிலையை விட வெப்பநிலை 2-3°C அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பம், மக்கள் நடமாட்டத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சென்னையை பொறுத்தவரை ஜூலை 01-02 வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதேபோல், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருபாதகவும் கணிக்கப்பட்டுள்ளது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை: 37-38°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29°C ஆகவும் பதிவாகக்கூடும்.