Page Loader
பொங்கலை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்
அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்

பொங்கலை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 17, 2025
07:05 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதனை தமிழக அரசு ஒரு செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது. இதில், 2025-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் வகையில், மேலும் பண்டிகை முடிந்த பின்னர் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பேருந்துகள் 

பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் திருநாளுக்கான சிறப்புப் பேருந்துகள் திட்டம், 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை 4 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், மொத்தமாக 7,498 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, 8.73 லட்சம் பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். பொங்கல் முடிந்த பிறகு, 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை, 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்பு பேருந்துகள் மற்றும் பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களில், 28,022, 29,056 மற்றும் 42,917 பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post