
சென்னை நோக்கி வந்த விமானத்தின் டயர் செயலிழந்ததால் அவசர தரையிறக்கம்
செய்தி முன்னோட்டம்
ஜெய்ப்பூரிலிருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) காலை டயர் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருந்ததாகவும், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தரையிறங்கியதாகவும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
விமானி தரையிறங்குவதற்கு முன்பு டயர் செயலிழப்பைக் கண்டறிந்து, இந்த சம்பவத்தை உடனடியாக தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு எச்சரிக்கை செய்தார்.
இதையடுத்து அவசரகால நெறிமுறைகள் செயல்படுத்தப்பட்டு, பாதுகாப்பான தரையிறக்கம் உறுதி செய்யப்பட்டது.
ஆய்வு செய்தபோது, சக்கர எண் 2 சேதமடைந்துள்ளதையும், டயரின் இடது உட்புறத்தின் துண்டுகள் கழன்று விழுந்துள்ளதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மாரடைப்பு
பயணிக்கு விமானததில் மாரடைப்பு
இதற்கிடையே, இந்தியாவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், சனிக்கிழமை (மார்ச் 29) அன்று பாட்னாவிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் ஒரு பயணி பரிதாபமாக இறந்தார்.
அசாமின் நல்பாரியில் வசிக்கும் சதீஷ் சந்திர பர்மன் எனும் அந்த பயணிக்கு விமானத்தின் நடுவில் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதை அடுத்து, 6E 2163 என்ற இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பணியாளர்கள் விரைவாக செயல்பட்டு அவருக்கு மருத்துவ உதவி வழங்கினர். எனினும், அவரது நிலை விரைவாக மோசமடைந்து உயிரிழந்தார்.
மரணத்திற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.