NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தாவின் இடைநீக்கம் ரத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தாவின் இடைநீக்கம் ரத்து
    ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தா இடைநீக்கம் ரத்து

    ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தாவின் இடைநீக்கம் ரத்து

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 04, 2023
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    ராஜ்யசபாவில் இருந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா சஸ்பெண்ட் செய்யப்பட்ட 115 நாட்களுக்கு பிறகு, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது.

    முன்னதாக, ஆளும் பாஜகவைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு ராஜ்யசபா எம்பிக்களை அவர்களின் அனுமதியின்றி, டெல்லி அரசு அதிகாரிகள் மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசிற்கு வழங்கும் டெல்லி சேவைகள் ஆணையை (இப்போது சட்டம்) ஆய்வு செய்வதற்கான குழுவின் உறுப்பினர்களாக அவர் முன்மொழிந்தார்.

    இதற்கு எதிராக பாஜக எம்பி ஜிவிஎல் நரசிம்ம ராவ் தாக்கல் செய்த உரிமை மீறல் தீர்மானத்தின் கீழ் அவர் ஆகஸ்ட் 11 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    Raghav Chadha statement about Suspension revoke order

    துணை குடியரசுத் தலைவருக்கு நன்றி

    தனது இடைநீக்கத்தை ரத்து செய்தது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ராகவ் சத்தா, "ஆகஸ்ட் 11ஆம் தேதி, நான் ராஜ்யசபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். நான் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றேன்.

    இப்போது 115 நாட்களுக்குப் பிறகு எனது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கும் ராஜ்யசபாவின் தலைவரான துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, கடந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ராகவ் சத்தாவுடன் சேர்ந்து மற்றொரு ஆம் ஆத்மி எம்பியான சஞ்சய் சிங் ஜூலை 24ஆம் தேதி ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் அக்டோபர் 4ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆம் ஆத்மி
    நாடாளுமன்றம்
    மாநிலங்களவை

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    ஆம் ஆத்மி

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லி
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி

    நாடாளுமன்றம்

    பிறந்தநாளை முன்னிட்டு, நாளை  தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  தேமுதிக
    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: என்னென்ன எதிர்பார்க்கலாம்? பிரதமர்
    ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு மத்திய அரசு
    நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி  காங்கிரஸ்

    மாநிலங்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025