NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி
    இந்தியா

    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி

    எழுதியவர் Sindhuja SM
    February 09, 2023 | 06:30 pm 1 நிமிட வாசிப்பு
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி
    காங்கிரஸ் கட்சியைப் போலல்லாமல், பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது: மோடி

    மக்களவையில் எதிர்க்கட்சிகளை சரமாரியாக நேற்று சாடியதை அடுத்து, பிரதமர் மோடி இன்று(பிப் 9) மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்தார். காந்தி(ராகுல் காந்தி) குடும்பத்தை கிண்டல் செய்த பிரதமர், நேரு குடும்பப்பெயருக்கு ஏன் பயப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதில் என்ன அவமானம் இருக்கிறது என்றும் கேட்டார். அதானி பிரச்னையை பேச வலியுறுத்தும் எதிர்க்கட்சிகளின் கோஷங்களோடு பிரதமரின் உரை இன்று ஆரம்பமானது. சமீபத்தில், மோடி மற்றும் அதானி பற்றி ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார். அப்போது, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அதானியின் சொத்து மதிப்பு $8 பில்லியனில் இருந்து $140 பில்லியனாக அதிகரித்துள்ளது என்று கூறிய ராகுல்காந்தி, விதிகளை மீறி அதானிக்கு சாதகமாக மோடி செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

    பாஜக பணி கலாச்சாரத்தை மாற்றியமைத்தது: பிரதமர்

    2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று கூறிய பிரதமர், நாடு எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் ஒருபோதும் தீர்வைக் காணவில்லை என்று குற்றம்சாட்டினார். ஆளும் பாஜகவைப் பாராட்டிய அவர், காங்கிரஸ் கட்சியைப் போலல்லாமல், பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் பாஜக கவனம் செலுத்துவதாகக் கூறினார். ஒரு நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டிய மோடி, காங்கிரஸ் ஆட்சியில் 600க்கும் மேற்பட்ட அரசுத் திட்டங்களுக்கு காந்தி-நேரு குடும்பத்தின் பெயர் சூட்டப்பட்டதாக கூறினார். எதிர்க்கட்சிகள் அறிவியலுக்கு எதிரானது என்றும், அவர்களின் முன்னுரிமை அரசியலே தவிர, வளர்ச்சி அல்ல என்றும் கூறிய அவர், தனது அரசாங்கம் தொழில்நுட்பத்தின் சக்தியுடன் இந்தியாவின் பணி கலாச்சாரத்தை மாற்றியமைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    நாடாளுமன்றம்
    மோடி
    நரேந்திர மோடி
    பிரதமர்
    ராஜ்யசபா

    இந்தியா

    அதானி-ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் உச்ச நீதிமன்றம்
    இந்தியாவில் ஜிக்சர் சீரியஸை அறிமுகம் செய்த சுசுகி! ஆட்டோமொபைல்
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை இலங்கை
    ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை ஆந்திரா

    நாடாளுமன்றம்

    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    வைரலாக பேசப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர் இந்தியா
    ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி மோடி
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி

    மோடி

    நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை இந்தியா
    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    ஆசியாவின் மிக பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி நரேந்திர மோடி
    1970இல் பிபிசி-யை தடை செய்த இந்திரா காந்தி: ஒரு பார்வை இந்தியா

    நரேந்திர மோடி

    மிகவும் பிரபலமான உலக தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் அமெரிக்கா
    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் மோடி
    பிரதமரின் ஆவணப்படம்: தடைக்கு எதிரான மனுக்களை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் மோடி
    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக

    பிரதமர்

    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் உலக செய்திகள்
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    பிபிசி வருமான வரியை சரியாக கட்டவில்லை: வருமான வரித்துறை இந்தியா

    ராஜ்யசபா

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு இந்தியா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023