NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன
    இந்தியா

    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன

    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன
    எழுதியவர் Sindhuja SM
    Feb 27, 2023, 12:20 pm 1 நிமிட வாசிப்பு
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன
    டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் குறித்து சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா 8 மணி நேரத்துக்கும் மேலான விசாரணைக்குப் பிறகு சிபிஐயால் நேற்று(பிப் 26) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இரண்டாவது டெல்லி அமைச்சர் இவர் ஆவார். மணிஷ் சிசோடியாவின் பதில்கள் திருப்திகரமாக இல்லை என்று மத்திய புலனாய்வுத் துறை(CBI) தெரிவித்துள்ளது. நேற்று காலை 11 மணிக்கு சிபிஐ தலைமையகத்துக்கு சென்ற மணிஷ் சிசோடியாவிடம், டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் குறித்து சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. FIRஇல் குறிப்பிடப்பட்டுள்ள தினேஷ் அரோரா மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் அவருக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றங்கள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிறையில் இருக்கத் தயார்: மணிஷ் சிசோடியா

    சிசோடியா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று புலனாய்வாளர்கள் உணர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், முக்கியமான விஷயங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டதற்கு மனிஷ் சிசோடியா விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். "அவர்(மணிஷ் சிசோடியா) மழுப்பலான பதில்களை அளித்தார். மேலும், ஆதாரங்கள் இருந்த போதிலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை" என்று சிபிஐ கூறியுள்ளது. சிசோடியாவை தீவிர விசாரணைக்கு உட்படுத்த காவலில் வைத்து விசாரணை செய்வது அவசியம் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். மணிஷ் சிசோடியா திங்கள்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று சிபிஐ தெரிவித்துள்ளது. தனக்கு எதிரான வழக்கை "போலி" என்று கூறிய சிசோடியா, ஏழு- எட்டு மாதங்கள் சிறையில் இருக்கத் தயார் என்று முன்னதாக கூறியிருந்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    டெல்லி
    ஆம் ஆத்மி

    இந்தியா

    உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது ஜிம்பாப்வே உலக செய்திகள்
    திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல் லண்டன்
    புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ  நாடாளுமன்றம்
    பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்! உலக கோப்பை

    டெல்லி

    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்  இந்தியா
    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  இந்தியா
    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு இந்தியா

    ஆம் ஆத்மி

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    டெல்லி அரசின் முடிவுகளுக்கு லெப்டினன்ட் கவர்னர் கட்டுப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  இந்தியா
    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது இந்தியா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023