டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய்
செய்தி முன்னோட்டம்
டெல்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் இன்று(பிப் 22) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
10 எம்பிக்கள், 14 எம்எல்ஏக்கள் மற்றும் 241 தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் ஆகியோர் இவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களித்ததாக கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் ஆம்-ஆத்மி கட்சி வெற்றி பெற்றதை அடுத்து நடைபெற்ற தேர்தலில் மொத்தமிருந்த 266 வாக்குகளில் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகளையும், ரேகா குப்தா 116 வாக்குகளையும் பெற்றனர்.
ஓபராய் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த்-கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ்-சிசோடியா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி
யாரிந்த ஷெல்லி ஓபராய்?
டிசம்பரில் ஆம்-ஆத்மி கட்சி உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றதில் இருந்து, ஆம்-ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே நீடித்த மோதலால் மேயர் தேர்தல் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
ஓபராய், கிழக்கு படேல் நகரைச் சேர்ந்த கவுன்சிலராவர். டெல்லி பல்கலைக்கழகத்தில்(DU) இவர் வருகைதரு பேராசிரியராகவும், இந்திய வர்த்தக சங்கத்தின்(ICA) வாழ்நாள் உறுப்பினராகவும் இவர் இருந்திருக்கிறார்.
இவர் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் (IGNOU) ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் Ph.D. பெற்றுள்ளார். மேலும், பல விருதுகளையும் வென்றுள்ளார்.
துணை மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏ சோயிப் இக்பாலின் மகன் ஆலே முகமதுவை ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.