ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
2024-நாடாளுமன்றம் தேர்தலுடன் இணைத்து மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்துவது குறித்த செயல்பாடுகளுக்கான ஆய்வினை மேற்கொள்ள மத்திய அரசு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது.
இந்நிலையில் தற்போது இக்குழுவில், மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன், என்.கே.சிங், சுபாஷ் சி.காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 8 பேர் இடம்பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை செயல்படுத்த தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள், வாக்குப்பதிவு மற்றும் விவிபிஏடி இயந்திரங்களின் தேவைப்பாடு, ஒரே வாக்காளர் பட்டியல் பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து இந்த ஆய்வு குழு ஆராய்ந்து தெளிவான அறிக்கையினை விரைவில் தாக்கல் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஆய்வு குழு
#BREAKING | நாடாளுமன்றம் முதல் கிராம ஊராட்சி வரை ஒரே நேரத்தில் தேர்தல் - ஆய்வுக்குழு அமைத்தது ஒன்றிய அரசு!#SunNews | #OneNationOneElection | #Amithsha pic.twitter.com/LhSoskFxiz
— Sun News (@sunnewstamil) September 2, 2023