சென்னை செல்லும் ரயில்கள் ரத்து: உதவி எண்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
செய்தி முன்னோட்டம்
புயல் மற்றும் கனமழை காரணமாக, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் சென்னைக்கு வடகிழக்கே 90 கிமீ தூரத்தில் உள்ள மிக்ஜாம் புயல் 8 கிமீ வேகத்தில் கரையை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
சென்ட்ரல் - 04425330714,
எழும்பூர் - 9003161811,
அவசர கால எண்கள்: 044-25354153, 044-25330952, 044-25330953
ஆகிய உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பியூஜிக்ன்
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்ட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள்:
நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்(22658),
பாண்டியன் எக்ஸ்பிரஸ்(12638),
பொதிகை எக்ஸ்பிரஸ்(12662),
நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ்(20692),
கொல்லம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ்(20636),
கன்னியாகுமரி-சென்னை எக்ஸ்பிரஸ்(12634),
செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ்(20684),
திருநெல்வேலி-சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ்(12632),
தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ்(12694),
ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ்(22662),
ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ்(16752),
மதுரை - டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ்(12651),
திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ்(20606),
குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் (16128)