LOADING...
TIME 2026-ஆம் ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க மனிதர்கள்: சுந்தர் பிச்சை, ரன்பீர் கபூர் உள்ளிட்ட 3 இந்தியர்களுக்கு கௌரவம்
TIME 2026-ஆம் ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க மனிதர்கள்

TIME 2026-ஆம் ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க மனிதர்கள்: சுந்தர் பிச்சை, ரன்பீர் கபூர் உள்ளிட்ட 3 இந்தியர்களுக்கு கௌரவம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 16, 2026
12:59 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் TIME இதழின் 2026-ஆம் ஆண்டிற்கான 100 செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியல் புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் அரசியல், தொழில்நுட்பம், கலை மற்றும் விளையாட்டு துறைகளை சேர்ந்த உலகளாவிய ஆளுமைகள் இடம்பிடித்துள்ளனர். குறிப்பாக, இந்தியாவை பெருமைப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத் துறையில் சுந்தர் பிச்சை, திரைத்துறையில் ரன்பீர் கபூர் மற்றும் சமையல் கலையில் விகாஸ் கண்ணா என மூன்று முக்கிய நபர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஆளுமைகள்

பட்டியலில் இடம்பிடித்த 3 இந்திய ஆளுமைகள்

டைம் இதழ் இம்முறை மூன்று வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த இந்தியர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது: 1. சுந்தர் பிச்சை: செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை கௌரவிக்கப்பட்டுள்ளார். 2. ரன்பீர் கபூர்: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் கலைத்திறனைப் பாராட்டி இந்த கௌரவம் கிடைத்துள்ளது. 3. விகாஸ் கண்ணா(Masterchef): இந்திய உணவு கலாச்சாரத்தை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்றதற்காக விகாஸ் கண்ணா இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூயார்க்கில் அவர் நடத்தி வரும் 'Bungalow' உணவகம் இந்திய பாரம்பரியத்தின் கதை சொல்லும் இடமாக திகழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகத் தலைவர்கள்

உலகத் தலைவர்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள்

இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போன்ற முக்கியமான தலைவர்கள் இடம்பிடித்துள்ளனர். மேலும், ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனே தகைச்சி, கத்தோலிக்க திருச்சபையின் போப் 14-ஆம் லியோ மற்றும் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர். தெற்காசியாவிலிருந்து நேபாளத்தின் பாலேந்திர ஷா மற்றும் வங்கதேசத்தின் தாரிக் ரஹ்மான் ஆகியோர் கவனிக்கத்தக்க ஆளுமைகளாக உருவெடுத்துள்ளனர்.

Advertisement

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம் மற்றும் ஏஐ (AI) வல்லுநர்கள்

செயற்கை நுண்ணறிவு துறையின் அசுர வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில், ஆன்ந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் டேரியோ அமோடி மற்றும் டேனியல் அமோடி, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் க்வின் ஷாட்வெல் மற்றும் கூகுள் யூடியூப் சிஇஓ நீல் மோகன் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மைக்ரோசாப்ட் மற்றும் டெல் (Dell) நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பாளர்களும் இதில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

மற்றவர்கள்

கலை மற்றும் பொழுதுபோக்குத் துறை

திரைத்துறையில் பென் ஸ்டில்லர், ஜோ சல்தானா, ஈதன் ஹாக் மற்றும் கேட் ஹட்சன் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். இசைத் துறையில் உலகப் புகழ்பெற்ற கே-பாப் (K-Pop) நட்சத்திரமான 'ஜேனி' (Jennie) மற்றும் லூக் கோம்ப்ஸ் ஆகியோரின் செல்வாக்கை டைம் இதழ் அங்கீகரித்துள்ளது. விளையாட்டுத் துறையில் எஃப் 1 பந்தய வீரர் லாண்டோ நோரிஸ் மற்றும் தடகள வீரர் நோவா லைல்ஸ் ஆகியோர் முக்கியப் பெயர்களாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் இந்தப் பட்டியல், உலகளவில் மாற்றத்தை உருவாக்கும் மனிதர்களின் உழைப்பையும், அவர்களின் தாக்கத்தையும் அங்கீகரிக்கும் ஒரு முக்கியக் கருவியாகத் திகழ்கிறது.

Advertisement