U19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2027: முழு அட்டவணை, இந்திய அணி விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. வரும் 2027 ஜனவரி 21 முதல் பிப்ரவரி 6 வரை நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்தும் இத்தொடரில், இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஜனவரி 22 அன்று மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள டி.யு. சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குரூப் ஏ வில் இந்தியா
போட்டி முறை மற்றும் அணிகள் விவரம்
இத்தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் அயர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தொடரை நடத்தும் நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், சமோவா அணிகளும்.
குரூப் சி பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நைஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும்.
குரூப் டி பிரிவில் அமெரிக்கா, ஸ்காட்லாந்து, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
நேபாளத்தின் காத்மாண்டு, முல்பானி மற்றும் வங்கதேசத்தின் சில்ஹெட், சட்டோகிராம் ஆகிய நகரங்களில் மொத்தம் 41 லீக் மற்றும் நாக்-அவுட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
நாக்-அவுட் சுற்றுகள்
இந்திய அணியின் லீக் ஆட்டங்கள்
குரூப் சுற்றில் இந்திய அணி ஜனவரி 22-ல் மேற்கிந்தியத் தீவுகளுடனும், ஜனவரி 24 அன்று தொடரை நடத்தும் நேபாள அணியுடனும், ஜனவரி 26 அன்று அயர்லாந்துடனும் மோதுகிறது.
இந்திய அணியின் அனைத்து லீக் போட்டிகளும் காத்மாண்டுவில் உள்ள டி.யு. மைதானத்திலேயே நடைபெறவுள்ளன.
லீக் சுற்று முடிவடைந்தவுடன் தகுதிபெறும் அணிகள் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை சூப்பர் சிக்ஸ் சுற்றில் பலப்பரீட்சை நடத்தும்.
தொடர்ந்து இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
பிப்ரவரி 4 அன்று இரு அரையிறுதிப் போட்டிகளும் வங்கதேசத்தின் சட்டோகிராமில் நடைபெறும் நிலையில், மாபெரும் இறுதிப்போட்டி பிப்ரவரி 6 அன்று சட்டோகிராம் மைதானத்தில் பகல் 1:30 மணிக்கு நடைபெறவுள்ளது.