NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2 மணிப்பூர்-மெய்தே மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு: 4 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    2 மணிப்பூர்-மெய்தே மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு: 4 பேர் கைது 
    கைது செய்யப்பட்ட நால்வரில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர்.

    2 மணிப்பூர்-மெய்தே மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு: 4 பேர் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 01, 2023
    07:04 pm

    செய்தி முன்னோட்டம்

    இரண்டு மணிப்பூர்-மெய்தே மாணவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கில், இருவரை மத்திய புலனாய்வுப் பிரிவினர்(சிபிஐ) தடுத்து வைக்கத்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட நால்வரில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர். அது தவிர, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இரு சிறுமிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த மே 3ஆம் தேதி இன வன்முறை தொடங்கிய மலை மாவட்டமான சுராசந்த்பூரில் இருந்து இந்த சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர்.

    சுராசந்த்பூர், மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 51 கிமீ தொலைவில் உள்ளது.

    ட்ஜகிவ்க்

    கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்திய 2 மணிப்பூர்-மெய்தே மாணவர்களின் புகைப்படங்கள் 

    ஜூலை 6 ஆம் தேதி பிஷ்ணுபூர் அருகே காணாமல் போன இரண்டு மெய்தே மாணவர்களது சடலங்களின் புகைப்படங்கள், கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மணிப்பூரில் மொபைல் சேவை மீண்டும் துவங்கியதும், வைரலான இந்த புகைப்படங்களில், மாணவர்களின் பின்னணியில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நிற்பது போலவும், அந்த மாணவர்கள் ஆதரவற்ற நிலையில் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது.

    மற்றொரு படத்தில், அவர்கள் கொலை செய்யப்பட்டது போல அவர்களது சடலங்கள் படம் பிடிக்கப்பட்டிருந்தது.

    மேலும், ஒரு காட்டுப் பகுதியில் அவர்களின் உடல்கள் கிடப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது.

    இதனையடுத்து, கடந்த வாரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மணிப்பூர்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    இந்தியா

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு இன்று மேலும் 5 பதக்கங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 29 தங்கம் வெள்ளி விலை
    இந்திய கால்பந்து அணி தோல்வி, விளாசிய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் ஆசிய விளையாட்டுப் போட்டி
    அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்- விவேக் ராமசாமி  அமெரிக்கா

    மணிப்பூர்

    மணிப்பூர் கொடூரம்: 19 வயது பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கும்பல் நாகாலாந்து
    மணிப்பூர் விவகாரம் - கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்  பிரதமர் மோடி
    மணிப்பூர் - புரட்சியின் குரல் என்னும் பெயரில் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள்  போராட்டம்
    மணிப்பூர் ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி மத்திய அரசின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025