இந்திய கால்பந்து அணி தோல்வி, விளாசிய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்கும் இந்திய கால்பந்து அணியானது, நேற்று (செப்டம்பர் 18) ரவுண்டு ஆஃப் 16 சுற்றில் சவதி அரேபியாவை எதிர்கொண்டது. சவுதி அரேபிய கால்பந்து வீரர் முகமது கலீல் மாரன், இந்தியாவிற்கு எதிராக 51 மற்றும் 57வது நிமிடங்களின் அடித்த கோல்களின் உதவியுடன நேற்றைய போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி. இந்தத் தோல்வியுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து வெளியேறியது இந்திய கால்பந்து அணி. இந்திய அணியின் இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அணியின் திட்டமிடுதலை கடுமையாக விளாசியிருக்கிறார்.
இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அதிருப்தி:
எந்த வித திட்டமிடுதல் மற்றும் பயிற்சிகளும் இல்லாமல் இந்திய கால்பந்து அணி இந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதற்கே இந்திய கால்பந்து ரசிகர்கள் அவர்களைப் பாராட்ட வேண்டும்", எனத் தெரிவித்திருக்கிறார் அவர். இந்திய ISL கால்பந்து கிளப்புகளானது, முக்கியமான வீரர்களுக்கு அனுமதியை மறுத்ததோடு, பல்வேறு வீரர்களால் கடைசி நேரத்திலேயே இந்திய அணியுடன் இணைய முடிந்திருக்கிறது. இதனால் எந்தவித பயிற்சிகளும் இல்லாமலேயே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியிருக்கிறது இந்திய கால்பந்து அணி. "இந்தியாவின் சிறந்த வீரர்கள் கொண்ட அணியை முன்னிறுத்த முடியவில்லை என்றால், போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது" எனத் தெரிவித்துள்ளார் இகோர் ஸ்டிமாக்.