NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு இன்று மேலும் 5 பதக்கங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு இன்று மேலும் 5 பதக்கங்கள்
    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு இன்று மேலும் 5 பதக்கங்கள்

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு இன்று மேலும் 5 பதக்கங்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 29, 2023
    09:55 am

    செய்தி முன்னோட்டம்

    தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், துப்பாக்கிச் சூட்டிலேயே தற்போது வரை அதிக பதக்கங்களை வென்றிருக்கும் இந்தியா, இன்றும் அதே விளையாட்டில் மேலும் நான்கு பதக்கங்களையும் வென்று, உலக சாதனையையும் முறியடித்திருக்கிறது.

    துப்பாக்கிச் சூட்டில், 10மீ ஏர் பில்டல் பிரிவில் ஈஷா சிங், பாலக் மற்றும் திவ்யா TS ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

    அதனைத் தொடர்ந்து 50மீ ரைபிள் 3P பிரிவில், ஸ்வப்னில் குசாலே, ஆஷ்வரி டோமர் மற்றும் அகில் ஷெரோனன் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

    இந்த ஆடவர் அணியானது 1769 புள்ளிகளுடன் சீனாவை இரண்டாமிடத்திற்குத் தள்ளி தங்கப் பதக்கத்தை வென்றதோடு, உலக சாதனையையும் முறியடித்திருக்கிறது.

    துப்பாக்கிச் சூடு

    தனிநபர் துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரு பதக்கங்கள்: 

    குழு விளையாட்டில் மட்டுமல்லது, 10மீ ஏர் பில்டல் மகளிர் பிரிவிலும் இந்திய வீராங்கணைகளான பாலக் மற்றும் ஈஷா சிங் ஆகியோர் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார்கள்.

    இவர்களில் பாலக் தங்கப் பதக்கத்தையும், அதே போட்டியில் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார்கள்.

    மேலும், 50மீ ரைபிள் 3P ஆண்கள் பிரிவில் ஸ்வப்னில் குசாலே மற்றும் அஷ்வரி டோமர் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்கள்.

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தற்போது வரை 30 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா, அவற்றில் 16 பதக்கங்கள் துப்பாக்கிச் சூட்டில் மட்டுமே பெறப்பட்டிருக்கின்றன. துப்பாக்கிச் சூட்டில் 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் உட்பட 16 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.

    டென்னிஸ்

    டென்னிஸ் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம்: 

    டென்னிஸ் விளையாட்டின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகெத் மைனெனி இணை.

    இறுதிச் சுற்றில் தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட தைவானைச் சேர்ந்த ஜேசன் ஜங் மற்றும் சூ யூ சியூ இணையிடம் 4-6, 4-6 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறது இந்திய ஆண்கள் இரட்டையர் அணி.

    முன்னதாக, இந்த இணையானது அரையிறுதியில் தென்கொரியாவின் சோனோன்வூ குவோன் மற்றும் சியோஞ்சன் ஹாங் ஜோடியை 6-1, 6-7, 10-0 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆசிய விளையாட்டுப் போட்டி
    துப்பாக்கிச் சுடுதல்
    இந்தியா
    டென்னிஸ்

    சமீபத்திய

    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு

    ஆசிய விளையாட்டுப் போட்டி

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்றுள்ள 5 வினோத விளையாட்டுகள் சீனா
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பாய்மர படகு அணி வெற்றியுடன் தொடக்கம் இந்திய அணி
    Sports Round Up: இந்திய பாய்மர படகு அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடம்; டாப் விளையாட்டு செய்திகள் இந்திய அணி
    ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி மகளிர் கிரிக்கெட்

    துப்பாக்கிச் சுடுதல்

    பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்! உலக கோப்பை
    துப்பாக்கிச் சுடுதலில் சர்வதேச வீராங்கனைகளை வீழ்த்தி தங்கம் வென்ற சென்னை மாணவி! சென்னை
    ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்! இந்தியா
    உலக பல்கலைகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன் சீனா

    இந்தியா

    பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை: இந்தியாவுக்கு எதிரான ஆதரங்களை சேகரிக்க கனடாவுக்கு உதவிய அமெரிக்கா  அமெரிக்கா
    இன்னும் 5 நாட்களில் முடிவடைகிறது ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு: நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியவை ரிசர்வ் வங்கி
    அதிக வந்தே பாரத் ரயில்கள் கொண்ட மண்டலமாக மாறிய தெற்கு ரயில்வே  ரயில்கள்
    இந்தியாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா

    டென்னிஸ்

    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா புற்றுநோய்
    முதல்முறையாக ஏடிபி டூர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி இந்தியா
    தொடர்ச்சியாக ஐந்தாவது விம்பிள்டன் வெற்றியை நோக்கி நோவக் ஜோகோவிச் நோவக் ஜோகோவிச்
    விம்பிள்டன் போட்டியின்போது மாதவிடாயா? இனி கவலையில்லை! வீராங்கனைகளுக்கு சூப்பர் அறிவிப்பு விம்பிள்டன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025