NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை வெளுக்கப் போகுது; அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை வெளுக்கப் போகுது; அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே
    அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிப்பு

    அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை வெளுக்கப் போகுது; அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 10, 2024
    06:05 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.

    அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-

    நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (10-11-2024) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.

    இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

    இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

    வானிலை அறிக்கை

    வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை

    10.11.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    11.11.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரிய இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    12.11.2024: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    வானிலை அறிக்கை

    வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை

    13.11.2024: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை. புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    14.11.2024: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    வானிலை அறிக்கை

    வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை

    15.11.2024: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம். திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    16.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

    அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்கள்

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    தமிழக கடலோரப்பகுதிகள்:

    10.11.2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    11.11.2024 முதல் 13.11.2024 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை

    pic.twitter.com/seya1dWkZJ

    — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 10, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    டிரம்ப் என்னத்த சொல்றது... இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி ஆப்பிள் நிறுவனம்
    அந்தர்பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்; இந்தியா-பாகிஸ்தான் மோதலில்  நேரடி மத்தியஸ்தம் செய்யவில்லை என மறுப்பு டொனால்ட் டிரம்ப்
    JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு பல்கலைக்கழகம்
    இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3  ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு சிட்ரோயன்

    வானிலை அறிக்கை

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கொட்ட போகிறது மழை  தமிழகம்
    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழக்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்

    வானிலை எச்சரிக்கை

    மழையை கணிக்கவும், மும்பையின் வெள்ளத்தை கண்காணிக்கவும் ஐஐடி-பாம்பேயின் புதிய செயலி ஐஐடி
    தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்: அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை மழை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    நெஞ்சுவலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி   தமிழகம்

    வானிலை எச்சரிக்கை

    அஸ்னா புயல்: குஜராத் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளது  புயல் எச்சரிக்கை
    தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை; வானிலை முன்னறிவிப்பு தமிழகம்
    தமிழக துறைமுகங்களுக்கு வார்னிங்; இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை ஆய்வு மையம்
    அடுத்த 3 நாட்களுக்கு இந்த பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்; மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை ஆய்வு மையம்

    வானிலை ஆய்வு மையம்

    தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை; தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கனமழை
    மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு; வானிலை அறிக்கை வானிலை அறிக்கை
    அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என IMD எச்சரிக்கை மழை
    தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அலெர்ட் தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025