LOADING...
ஜி 7 தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய கவனிக்கத்தக்க இந்திய கலாசார பரிசுகள் என்ன தெரியுமா?
மார்க் கார்னியின் அழைப்பின் பேரில் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார்

ஜி 7 தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய கவனிக்கத்தக்க இந்திய கலாசார பரிசுகள் என்ன தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 19, 2025
06:58 pm

செய்தி முன்னோட்டம்

கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார். அதே ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உலக தலைவர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் பலர் வருகை தந்திருந்தனர். அவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஜி7 உறுப்பினர் நாடுகளின் தலைவர்களுக்கு மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் கைவினைப் பொருட்கள், பாரம்பரிய ஓவியங்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றை பரிசாக வழங்கியுள்ளார். இந்த பரிசுகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாசார சிறப்பம்சங்களை பிரதிபலிப்பவை ஆகும். மோடி வழங்கிய பரிசுகளின் விவரம் பின்வருமாறு:

பரிசு

கலாசாரத்தை பிரதிபலிக்கும் பரிசுகள்

பித்தளை போதி மரம்- கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு: அமைதி, ஆன்மிக விழிப்புணர்வைக் குறிக்கும் இந்த சிற்பம் கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டது. நந்தி சிற்பம் (டோக்ரா கலை)- பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு: பண்டைய மெழுகு வடிவமைப்பு நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சிற்பம். வார்லி ஓவியம்- மெக்சிகன் அதிபர் கிளாடியா ஷீன்பாமுக்கு: மகாராஷ்டிரா பழங்குடியினர் வரைந்த விவசாயம், நடனம், வாழ்வியலை பிரதிபலிக்கும் ஓவியம். மதுபானி ஓவியம்- தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு: பீஹார் மாநிலத்தின் பாரம்பரிய ஓவியக் கலை. பித்தளை டோக்ரா குதிரை- தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுக்கு: சத்தீஸ்கரின் பழங்குடி கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டது.

பரிசு

கலாசாரத்தை பிரதிபலிக்கும் பரிசுகள்

மூங்கில் படகு மற்றும் அன்னம் சிலை- பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு: மேகாலயாவின் பாரம்பரியத்தையும், கைவினைத்திறனையும் பிரதிபலிக்கிறது. கோலாபுரி வெள்ளிப் பானை- ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்க்கு: மஹாராஷ்டிராவின் பாரம்பரிய சடங்கு பானை, தூய வெள்ளியில் உருவாக்கப்பட்டது. கோனார்க் சக்கர மணற்கல் சிற்பம் - ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸுக்கு: ஒடிசாவின் 13ம் நூற்றாண்டு சூரிய கோவிலின் சின்னம். வெள்ளி பர்ஸ் - கனடா கவர்னர் ஜெனரல் மேரி சைமனுக்கு: ஒடிசாவின் 500 ஆண்டுகள் பழமையான தாரகாசி கலைப்பணியின் பிரதிநிதி. கருங்காலி மரப்பெட்டி- ஆல்பர்ட்டா மாநில பிரதமர் டேனியல் ஸ்மித்துக்கு: ராஜஸ்தானில் வடிவமைக்கப்பட்ட, பண்டைய ஓவியங்களுடன் கூடிய மரப்பெட்டி.