LOADING...
எஸ்பிஐ வங்கிக்கு இழப்பை ஏற்படுத்திய வழக்கில் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை
அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை

எஸ்பிஐ வங்கிக்கு இழப்பை ஏற்படுத்திய வழக்கில் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2025
01:22 pm

செய்தி முன்னோட்டம்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், அதன் தலைவர் அனில் அம்பானியும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு (எஸ்பிஐ) ரூ. 2,000 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வங்கி மோசடி தொடர்பாக, சிபிஐ சனிக்கிழமை அன்று சோதனை நடத்தியது. மும்பையில் அனில் அம்பானிக்கு சொந்தமான ஆறு இடங்களில் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றது. வங்கி நிதிகள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டன மற்றும் கடன்கள் திசை திருப்பப்பட்டதா என்பதை நிறுவுவதற்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிப்பதை இந்த சோதனைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.2,000 கோடிக்கு மேல் எஸ்பிஐ வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மோசடி 

அனில் அம்பானி கணக்கை மோசடி என அறிவித்த எஸ்பிஐ

எஸ்பிஐ வங்கி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அனில் அம்பானி கணக்கை மோசடி என்று கடந்த ஜூன் 13 அன்று அறிவித்து, ஜூன் 24 அன்று ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) அறிக்கை அனுப்பியது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு கணக்கை மோசடி என்று அறிவித்த பிறகு, 21 நாட்களுக்குள் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், சிபிஐ அல்லது போலீசாரிடம் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன்களில், பல நிறுவனங்களுக்கு இடையில் நிதி நகர்வுகள் இருந்ததாக எஸ்பிஐ வங்கி கண்டறிந்துள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து அனில் அம்பானிக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு அவர் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.