NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 
    CBI தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மேலும் நீட்டிப்பு

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 25, 2024
    01:48 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

    அவரை, மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் வரிக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்தது.

    திகார் சிறையில்

    இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கெஜ்ரிவால் விசாரணைக்கு வந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா மற்றும் பாரதிய ராஷ்டிர சமிதியின் கே கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவலையும் நீதிமன்றம் நீட்டித்தது.

    கூடுதல் குற்றச்சாட்டுகள்

    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது

    கலால் கொள்கை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவாலின் மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ஒத்திவைத்தது.

    கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் கோரிக்கை மீதான உத்தரவையும் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    மேலும் அவரது வழக்கமான ஜாமீன் மனுவை ஜூலை 29 அன்று பரிசீலிக்கும்.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜூன் 26ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

    ஜாமீன் மற்றும் கைது

    நீதிமன்ற வளாகத்தில் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது

    தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையுடன் தொடர்புடைய அமலாக்க இயக்குனரகத்தின் (ED) பணமோசடி விசாரணையில் நீதிமன்ற காவலில் இருந்த கெஜ்ரிவால், கடந்த மாதம் இதே வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

    டெல்லி நீதிமன்றம் முதல்வருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கியதை அடுத்து, நீதிமன்ற வளாகத்திலேயே இந்த கைது படலம் நடந்தது.

    பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை என்று உச்ச நீதிமன்றம் அறிவிப்பு உச்ச நீதிமன்றம்
    குற்றவாளிகளின் செலவில் கெஜ்ரிவால் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்: அமலாக்கத்துறை  டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி உச்ச நீதிமன்றம்
    அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன? உச்ச நீதிமன்றம்

    டெல்லி

    நீட் தேர்வை எதிர்த்து நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது AISA நீட் தேர்வு
    வட இந்தியாவை வாட்டும் கடும் வெயில்: டெல்லியில் 5 பேரும், நொய்டாவில் 10 பேரும் பலி  இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு ஆம் ஆத்மி
    கடும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு  வெப்ப அலைகள்

    காவல்துறை

    பணிப்பெண் கொடுமைபடுத்திய விவகாரம்: பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆந்திராவில் கைது தமிழக காவல்துறை
    காஞ்சிபுரத்தில் ஒரு ஸ்கூட்டர் மீது மோதி அதை 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற BMW கார் காஞ்சிபுரம்
    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    அவதூறு சர்ச்சை: ஏ.வி.ராஜூ மீது நடிகர் கருணாஸ் புகார் அதிமுக

    காவல்துறை

    இந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கு: அமெரிக்க காவல் அதிகாரி விடுவிப்பு அமெரிக்கா
    கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு ஜார்கண்ட்
    நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்திற்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்  டெல்லி
    மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மயிலாடுதுறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025