எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ்
இந்தியாவின் கோ பிராண்டட் கிரெடிட் கார்டு பிரிவில் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து இரண்டு புதிய கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ நிதி சேவை நிறுவனம் தனி நிறுவமாக்கப்பட்டு புதிய திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தற்போது கிடைத்த தகவல்களின் படி, எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து ரூபே கிரெடிட் கார்டுகளை வழங்கத் திட்டமிட்டிருக்கிறது ரிலையன்ஸ். இந்த கோ பிராண்டட் கிரெடிட் கார்டு மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்கத் திட்டமிட்டிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.
ரிலையன்ஸின் கோ பிராண்டட கிரெடிட் கார்டுகள்:
ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தும் இந்தக் குறிப்பிட்ட கோ பிராண்டட் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், ஜியோ மார்ட் மற்றும் அர்பன் லேடார் உள்ளிட்ட வணிகக் கடைகளில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை அளிக்கவிருக்கிறது அந்நிறுவனம். ரிலையன்ஸின் எந்த விதமான வணிகத்திற்கு இந்த ரிலையன்ஸ் கோ பிராண்டட் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினாலும், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் மற்றும் பிற சலுகைகளை அளிக்கவிருக்கிறது ரிலையன்ஸ். கிரெடிட் கார்டு சேவை வழங்குவதன் மூலம், நிதி சேவையில் ரிலையன்ஸ் இப்படி நுழைந்திருக்க, இந்தியாவில் டெபிட் கார்டுகளை சந்தையிலும் கால்பதிக்கத் திட்டமிட்டு வருகிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ நிதி சேவை நிறுவனம்.