NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரீவைண்ட் 2023 : கோலிவுட்டில் நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரீவைண்ட் 2023 : கோலிவுட்டில் நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகள்
    ரீவைண்ட் 2023 : கோலிவுட்டில் நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகள்

    ரீவைண்ட் 2023 : கோலிவுட்டில் நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 19, 2023
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் பலவற்றை நியூஸ்பைட்ஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறோம்.

    இந்தாண்டின் அரசியல் திருப்பங்கள், தமிழகத்தில் நடந்த சில சம்பவங்கள், சிறந்த படங்கள், தோல்வியுற்ற படங்கள், ஆஸ்கார் நிகழ்வுகள் என பல உள்ளது நாம் அசைபோட.

    அந்த வரிசையில் இன்று, கோலிவுட் வட்டாரத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகளை பற்றி பார்ப்போம்.

    card 2

    ரஜினி-விஜய் சொன்ன காக்கா-கழுகு கதை 

    ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், "காட்டில் பெரிய மிருகங்கள் எப்பவும் சின்ன மிருகங்களை தொல்லை செய்து கொண்டிருக்கும்.

    உதாரணத்திற்கு, காகம் தொல்லை செய்து கழுகை சீண்டிக்கொண்டே இருக்கும்". என ஒரு கதையை கூற, அது நடிகர் விஜயை தாக்கி தான் ரஜினிகாந்த் சொல்கிறார் என்று இணையத்தில் கலவரம் வெடித்தது.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற லியோ திரைப்பட வெற்றி விழாவில், விஜயும் தன் பங்கிற்கு, "ஒரு காட்டுல சிங்கம், புலி, யானை, மான், காக்கா , கழுகு" என மீண்டும் குட்டி ஸ்டோரி கூறினார்.

    ரஜினிகாந்த் அரசியலில் நுழைந்து பின்னர் பின்வாங்கியதை குறி வைத்து தான் அவர் பேசினார் என மீண்டும் சோஷியல் மீடியாவில் சண்டை வெடித்தது.

    card 3

    அமீர்-ஞானவேல் ராஜா-பருத்திவீரன் 

    இந்த ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் வெடித்த பருத்திவீரன் திரைப்படம் தொடர்பான சர்ச்சை, இவ்வாண்டில் தமிழ் சினிமாவில் உருவான மிகப்பெரிய சர்ச்சையாக மாறிப்போனது.

    'பருத்திவீரன்' தொடர்பாக அப்படத்தின் இயக்குனர் அமீர் கூறிய கருத்துக்களும், அதுக்கு பதிலளிக்கும் வகையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்த கருத்துக்களும் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை இரண்டாகியது.

    படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சனையில் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும், இடையே ஏற்பட்ட பிரச்சனையை, பல்வேறு சினிமா சங்கங்கள் தலையிட்டும் சரிசெய்ய முடியாததால், விவகாரம் உயர்நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

    17 வருடங்களுக்கு முன்னால் வெளியான ஒரு திரைப்படம், தமிழ் திரையுலகில் இப்போது பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

    card 4

    சிவகார்த்திகேயன்-இமான் 

    கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு தனியார் சேலின் நேர்காணலில் பேசிய இமான், சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டதாகவும், அதனால் இனிமேல் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

    மேலும் அவர் தன் குழந்தைகளின் நலன் கருதி, இந்த விவகாரத்தில் மேலும் பேசுவதை தவிர்ப்பதாகவும் கூறியிருந்தார்.

    சினிமா வட்டாரம் மற்றும் ரசிகர்களிடையே இது பேசுபொருளான நிலையில், இமானிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவரது மனைவி மோனிகாவும், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

    இதனால் இமான் விவாகரத்திற்கு, சிவகார்த்திகேயனே காரணம் என சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    எனினும் இந்த விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் மௌனம் காத்துவருகிறார்.

    card 5

    மன்சூர் அலிகான்- திரிஷா 

    'லியோ' படத்தில் திரிஷா-உடன் தனக்கு காட்சிகளே இல்லை என்பதை மன்சூர் அலிகான் தன்னுடைய பாணியில் ஒரு கருத்தை முன்வைக்க, அது த்ரிஷாவின் கவனத்திற்கு சென்றது.

    அந்த சர்ச்சைக்குரிய கருத்தை அவர் வன்மையாக கண்டித்தார். தொடர்ந்து மன்சூருடன் படங்கள் நடிக்கப்போவதில்லை எனவும் கூறினார்.

    இதனை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தினர் பலரும் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து மாதர் சங்கத்தினர், அவர் மீது காவல்துறையினரிடம் வழக்கு தொடுத்தனர்.

    இதனால் வேறு வழியின்றி மன்னிப்பு கோரிய மன்சூர் அலிகான், அடுத்த இரண்டு நாட்களில் நீதிமன்றத்தை நாடி, தன்னை நோக்கி கேள்வி எழுப்பிய சக நடிகர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடுத்தார்.

    ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    card 6

    விசித்ரா-பிரதீப் (பிக் பாஸ்)

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 7 வது சீசனில் உள்ளது. இந்த நிகழ்ச்சி அதற்கு முந்தைய சீசன்கள் போலன்றி பல சர்ச்சைகளையும், எதிர்மறை விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

    குறிப்பாக பிரதீப் என்ற போட்டியாளர் ஒருவரை, சகபோட்டியாளர்கள் 'ரெட் கார்டு' கொடுத்து வெளியே அனுப்பியதும், அதற்கு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசனும் உடந்தையாக இருந்தது, கடும் கண்டனத்தை ஈர்த்து வருகிறது.

    அதேபோல, மற்றொரு போட்டியாளரான விசித்ரா, ஒரு டாஸ்கின் போது, தன்னுடைய சினிமா கேரியரில், தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டலை பற்றி வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதும், இணையத்தில் வைரலானது.

    அந்த சம்பவத்தில் ஈடுப்பட்டது யார் என்றும் இணையவாசிகள் பகிரதொடங்கினர்.

    card 7

    கௌதம் மேனன்- துருவ நட்சத்திரம் திரைப்பட வெளியீடு 

    நிலுவைத் தொகை பிரச்சனையில் சிக்கி இருக்கும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வருகிறது.

    கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 7 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    எனினும் படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கப்படாத நிலையில், கடைசி நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், நிலுவை தொகை செலுத்திய பின்னர் படத்தை வெளியிடலாம் என உத்தரவு பிறப்பித்தது.

    இதனை தொடர்ந்து, பட வெளியீடு மறுதேதி குறிப்பிடாமல் மேலும் தள்ளி போனது. சிலம்பரசனை வைத்து 'சூப்பர் ஸ்டார்' என்ற படத்தை இயக்குவதற்காக, ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம், கௌதம் மேனன் அட்வான்ஸ் ஆக பெற்ற தொகையை திருப்பி வழங்க, நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    card 8

    மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி- ஏஆர் ரஹ்மான் 

    தான் திரைக்கு வந்து 30 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக சென்னையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்.

    ஆனால் ஒருங்கிணைப்பாளர்களின் தவறான திட்டமிடுதலால், கூட்டத்தினரை சரியாக கட்டுப்படுத்த முடியாமல் போகவே, தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    பல போலி டிக்கெட்களும் விநியோகிக்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்ததது.

    அதோடு, சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதில் முதலமைச்சர் ஸ்டாலினின் கான்வாயும் அடங்கும்.

    அதனை தொடர்ந்து பலரும் ஏஆர் ரஹ்மான்-ஐ கண்டிக்கவே, உடனே அவர் வருத்தம் தெரிவித்து, நிகழ்ச்சிக்கு டிக்கெட் புக் செய்தும், நிகழ்ச்சியை காண முடியாது போனவர்களுக்கு பணத்தை திருப்பி தர ஏற்பாடு செய்வதாக உத்தரவாதம் அளித்தார்.

    card 9

    CBFC மீது விஷால் குற்றசாட்டு

    தன்னுடைய 'மார்க் ஆன்டனி' படத்தின் ஹிந்தி டப்பிங் பாதிப்பிற்கு, சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவர் தன்னிடம் லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றசாட்டை முன்வைத்தார்.

    கடைசிநிமிட சென்சார் சான்றிதழ் பெற லட்சக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாகவும், அந்த பணத்தை தந்தபின்னர் தான், சென்சார் முன்னிலையில் படத்தை திரையிடவே அனுமதித்தார்கள் எனவும், பிரதமர் மோடியை டேக் செய்து அவர் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிடவே, அது பலரையும் அதிர்ச்சியடைய வைத்து.

    இதனை அடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது மத்திய அரசு. அதன் தொடர்ச்சியாக நடிகர் விஷாலும், மும்பை சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார்.

    card 10

    லியோ வெற்றிவிழா- ரத்னகுமார் 

    'ஜெயிலர்' வெற்றிவிழாவின் போது, ரஜினிகாந்த் காக்கா- பருந்து கதையை கூறினார்.

    அதையடுத்து, 'பருந்து' ரஜினிகாந்த் என்றும், பருந்தை போல பறக்க நினைக்கும் 'காக்கா' தான் விஜய் என்றும் ரசிகர்கள் முடிவு செய்து, சமூக வலைத்தளத்தில் சண்டை போட ஆரம்பித்தனர்.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற 'லியோ' படத்தின் வெற்றி விழாவில், எழுத்தாளர் ரத்னகுமார் பேசியது சர்ச்சையானது.

    அந்த மேடையில், ரத்னகுமார் "எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசி என்றால் கீழே இறங்கி வர வேண்டும்" என கூறியது ரஜினியை குறிப்பிட்டு தான் எனவும், ரஜினியின் வயதிற்கும், அனுபவத்திற்கும் சற்றும் மரியாதை தராமல், ரத்னகுமார் பேசியுள்ளார் என ரஜினி ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.

    அதனை தொடர்ந்து ரத்னகுமார் சமூகவலைத்தளத்தில் இருந்து சிலகாலம் விலகி இருக்கப்போவதாக அறிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    தமிழ் சினிமா
    சினிமா
    ரஜினிகாந்த்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கோலிவுட்

    நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன் நடிகர்
    'உலகிலேயே அழகான பெண்ணுடன் நான்': கீர்த்தி பாண்டியனுடன் அசோக் செல்வன்  பொழுதுபோக்கு
    இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை  இசையமைப்பாளர்
    மீண்டும் சர்ச்சையில் கூல் சுரேஷ்; கண்டனங்களை ஈர்த்த அவரின் நடவடிக்கை  வைரல் செய்தி

    தமிழ் சினிமா

    'கில்லி' பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பிறந்தநாள்: அவரை பற்றி ஒரு சிறு தொகுப்பு பிறந்தநாள்
    நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவர் நடிப்பில் வெளியான சில சுவாரசிய படங்கள்  பிறந்தநாள்
    ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் மகளுக்கு திருமணமா? கோலிவுட்
    சூர்யவம்சம் 2 விரைவில்! சரத்குமார் ட்வீட்டால் வெளியான சூப்பர் அப்டேட் கோலிவுட்

    சினிமா

    இன்று திருமணம்: வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் வைரல் செய்தி
    பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு நன்றி தெரிவித்த கமல் கமல்ஹாசன்
    ஹரிஷ் கல்யாண்- எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ள பார்க்கிங் படத்தின்  ட்ரெய்லர் வெளியானது தமிழ் திரைப்படம்
    'தூம்' படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார் இயக்குனர்

    ரஜினிகாந்த்

    நெட்பிளிக்ஸில் வெளியாகிறது சந்திரமுகி 2 திரைப்படம் சந்திரமுகி 2
    "33 வருடங்கள் கழித்து...": அமிதாப் பச்சனுடன் நடிப்பது குறித்து சிலாகித்த ரஜினி லைகா
    ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்க இருக்கும் லியோ ஜெயிலர்
    'தலைவர் 170' படப்பிடிப்பு- 33 ஆண்டுகளுக்கு பின் இணைந்த அமிதாப்பச்சன்-ரஜினிகாந்த் கூட்டணி  ஜெயிலர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025