NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 2023-ல் கோலாகலமாக நடைபெற்ற கோலிவுட் நட்சத்திர திருமணங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2023-ல் கோலாகலமாக நடைபெற்ற கோலிவுட் நட்சத்திர திருமணங்கள்
    2023-ல் கோலாகலமாக நடைபெற்ற கோலிவுட் நட்சத்திர திருமணங்கள்

    2023-ல் கோலாகலமாக நடைபெற்ற கோலிவுட் நட்சத்திர திருமணங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 15, 2023
    06:05 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் பலவற்றை நியூஸ்பைட்ஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறோம்.

    இந்தாண்டின் அரசியல் திருப்பங்கள், தமிழகத்தில் நடந்த சில சம்பவங்கள், சிறந்த படங்கள், தோல்வியுற்ற படங்கள், ஆஸ்கார் நிகழ்வுகள் என பல உள்ளது நாம் அசைபோட.

    அந்த வகையில், இந்தாண்டு நடைபெற்ற சில கோலிவுட்டின் கோலாகல திருமண கொண்டாட்டங்களை பற்றி பார்ப்போம்.

    திரையில் மின்னும் நட்சத்திரங்கள், தங்கள் நிஜவாழ்க்கையிலும் ஜொலிக்க அவர்களை வாழ்த்தி, இந்தாண்டு திருமண பந்தத்தில் இணைந்த நட்சத்திர ஜோடிகளை பற்றி பார்ப்போம்.

    card 2

    கவின் - மோனிகா டேவிட்

    விஜய் டிவியின் தொடர்களில் நடித்து பலரின் மனதில் இடம்பிடித்தவர் கவின். இருப்பினும் அவருக்கான அங்கீகாரத்தை வழங்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி.

    அதன்பின்னர், அவர் அந்த அங்கீகாரத்தை கச்சிதமாக பயன்படுத்தி, வெற்றி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

    பிகஃபாஸ் இல்லத்தில் இருக்கும்போது, சக போட்டியாளரான லொஸ்லியாவுடன் கிசுகிசுக்கப்பட்டாலும், அதை பற்றி அவர் வெளிஉலகத்தில் பேசியதில்லை.

    இந்தாண்டு, கவின், தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

    card 3

    அதிக் ரவிச்சந்திரன்- ஐஸ்வர்யா பிரபு 

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடக்கவிருப்பது குறித்து ஏற்கனவே தமிழ் நியூஸ்பைட்ஸில் தெரிவித்தது போலவே, இன்று காலை பிரபலங்கள் பலர் முன்னிலையில், கோலாகலமாக நடந்தது, இவர்களின் திருமணம்.

    GV பிரகாஷ் நாயகனை நடித்த 'திரிஷா இல்லேன்னா நயன்தாரா' என்ற படத்தை எடுத்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஆதிக்.

    அதன் பின்னர், AAA , பகீரா போன்ற படங்களை எடுத்தாலும், சமீபத்தில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம், அவருக்கு மிகப்பெரும் வெற்றியை தந்தது.

    இவருக்கு, நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் இன்று திருமணம் நடைபெற்றது

    card 4

    ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா 

    நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா', நடிகர் சந்தானம் நடித்த 'A1' போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி.

    அஜித் குமாரின் 'அவள் வருவாளா'(1998) திரைப்படத்தின் பாடல் காட்சிகளில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதற்கு பிறகு, சினிமாவில் நடிக்க அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்த நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்தார்.

    அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து வருகிறது.

    இந்நிலையில், அவருக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் மருத்துவராக நடித்திருந்த நடிகை சங்கீதா என்பவருக்கும் சென்ற வாரம் திருமணம் நடைபெற்றது.

    card 5

    அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்

    கோலிவுட்டில் யாருமே எதிர்பார்க்காத காதல் திருமணம் இவர்களுடையது தான்.

    கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக காதலித்து வரும் இந்த ஜோடி, இந்தாண்டு திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்தது.

    இவர்கள் இருவரும் காதலிப்பது, இவர்களின் நெருங்கிய நண்பர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாதவாறு பார்த்து கொண்டனர் இந்த இரண்டு நட்சத்திரங்களும்.

    திருநெல்வேலி அருகே உள்ள கீர்த்தி பாண்டியனின் தோட்டத்தில், சூரியகாந்தி செடிகளுக்கு நடுவே, ஆலமரத்திற்கு அடியில், தமிழ் முறைப்படி நடந்தது இந்த அழகான திருமண வைபவம்.

    card 6

    அமலா பால் - ஜெகத் தேசாய்

    இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை அமலா பால் அவரை விவாகரத்து செய்த பின்னர், கடந்த 6 ஆண்டுகளாக சிங்கிளாகவே வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில், ஜெகத் தேசாய் என்பவருடம் காதல் வயப்பட்ட அமலா பால் கடந்த அக்டோபர் மாதம் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

    அவர்களின் ப்ரோபோசல் வீடியோ வைரலான சில நாட்களிலேயே இவர்கள் திருமணமும் முடிந்தது

    card 7

    கார்த்திகா நாயர்- ரோஹித்

    பழம்பெரும் நடிகை ராதாவின் மகள் கார்த்திகை நாயர். தமிழில் கோ படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன்பின்னர் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு, தன்னுடைய தந்தையின் பிசினெஸை மேற்பார்வையிட சென்றுவிட்டார்.

    அவருக்கும், ரோஹித் மேனன் என்பவருக்கும் சென்ற மாதம் கேரளாவில் திருமணம் நடைபெற்றது.

    திரையுலகின் நட்சத்திரங்கள் பலரும் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    card 8

    திருமண நிச்சயதார்தங்கள்

    மேற்கூறிய நட்சத்திரங்களை தாண்டி, திருமண நிச்சயதார்த்தம் முடித்து, திருமணத்தை எதிர்பார்த்திருக்கும் சில ஜோடிகளும் இந்த பட்டியலில் உண்டு.

    காளிதாஸ் ஜெயராம்- தாரிணி காலிங்கராயர்: இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இவர்களின் திருமண தேதி குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை

    உமாபதி- ஐஸ்வர்யா அர்ஜுன்: கோலிவுட்டின் இளம்ஜோடியான நடிகர் உமாபதிக்கும், நடிகை ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் சில மாதங்களுக்கும் முன்னர் சென்னையில் உள்ள அர்ஜுனின் கோவிலில் வைத்து திருமண நிச்சயம் நடைபெற்றது

    இந்திரஜா 'ரோபோ' ஷங்கர்- கார்த்திக்: இவர்களின் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இதற்காக 'ரோபோ' ஷங்கரும் அவரது குடும்பத்தாரும், ரஜினி, கமல் என பல பிரபலங்களை நேரில் சந்தித்து பத்திரிக்கை வைத்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    திருமணங்கள்
    திருமணம்

    சமீபத்திய

    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்
    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா

    கோலிவுட்

    தளபதி 68 : LA -வில் வெற்றிகரமாக 3D ஸ்கேன் முடிந்ததை அறிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு  நடிகர் விஜய்
    ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கோலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ் இடம்பெறுவார்கள் எனத்தகவல் விஜய்
    மறக்குமா நெஞ்சம்: ஏஆர் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் கோலிவுட் பிரபலங்கள் ஏஆர் ரஹ்மான்
    நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன் நடிகர்

    திருமணங்கள்

    விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ குறித்து வெளியான புதிய தகவல் ஓடிடி
    பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய போகும் 'தோனி' பட நாயகி கியாரா பாலிவுட்
    மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்யும் ஹர்திக் பாண்டியா!! கிரிக்கெட்
    ஜப்பானில் பரவிவரும் வார இறுதி திருமணங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உறவுகள்

    திருமணம்

    மனைவி பிரிவு தாங்காமல் தனியே தவித்த தந்தை - திருமணம் செய்து வைத்த மகள் கேரளா
    திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்?  அமலா பால்
    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  காவல்துறை
    2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை தீபாவளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025