Page Loader
இன்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது
இன்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது

இன்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது

எழுதியவர் Venkatalakshmi V
Dec 15, 2023
11:40 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடக்கவிருப்பது குறித்து ஏற்கனவே தமிழ் நியூஸ்பைட்ஸில் தெரிவித்தது போலவே, இன்று காலை பிரபலங்கள் பலர் முன்னிலையில், கோலாகலமாக நடந்தது இவர்களின் திருமணம். இந்த திருமண விழாவில், திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். குறிப்பாக நடிகர் சங்க பொது செயலாளரும், நடிகருமான விஷால் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளியான 'மார்க் ஆன்டனி', விஷாலின் திரை வரலாற்றில் ஒரு முக்கியமான படமாகும். தொடர்ச்சியாக பல தோல்வி படங்களை தந்து, சரிவை சந்தித்து வந்த விஷாலின் மார்க்கெட், இப்படத்தின் மூலம் லாபத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா திருமணம்