Page Loader
தமிழக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

தமிழக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் வாழ்த்து

எழுதியவர் Venkatalakshmi V
Mar 01, 2025
11:15 am

செய்தி முன்னோட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது நாளை அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செய்து துவங்கினார். பின்னர் பெரியார் திடலில் மரியாதை செய்தார். அதே போல, அவருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி வாழ்த்து 

பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில், தனது வாழ்த்துக்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். "தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கவர்னர் ரவி

கவர்னர் ரவியின் தமிழ் வாழ்த்து

தமிழக கவர்னர் ரவி, தமிழில் கையெழுத்து போட்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், "தாங்கள் இன்று தங்களுடைய 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழக மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன். மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால், தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழக மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். "எனது சகோதரரும் தமிழக முதல்வருமான திரு @mkstalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்".

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் எக்ஸ் பக்கத்தில், "தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

TVK விஜய்

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்" என அவர் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post