Page Loader
பஹல்காம் தாக்குதல்: சவுதி பயணத்தை பாதியில் நிறுத்தி, நாடு திரும்பினார் பிரதமர் மோடி, தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை 
முக்கிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி

பஹல்காம் தாக்குதல்: சவுதி பயணத்தை பாதியில் நிறுத்தி, நாடு திரும்பினார் பிரதமர் மோடி, தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 23, 2025
09:46 am

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவிற்கு வந்த பொதுமக்கள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசரமாக இந்தியா திரும்பினார். டெல்லி வந்து இறங்கியதுமே, விமனநிலையத்திலேயே சூழ்நிலையை மதிப்பீடு செய்யும் வகையில், முக்கிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மற்றும் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

காஷ்மீர் தாக்குதல்

பஹல்கம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாக தகவல் 

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார். அவருடைய பயணம் இன்று இரவில் முடிவடைய வேண்டியதாயிருந்தாலும், பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்த காரணத்தால், அவர் நேற்று நள்ளிரவே சவுதியில் இருந்து புறப்பட்டார். இந்த நிலையில், சூழ்நிலையை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியிலிருந்து காஷ்மீர் சென்றடைந்தார். அங்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் நளின் பிரபாத் உள்துறை அமைச்சருக்கு நேரில் விளக்கமளித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. உடன், லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் மற்றும் புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர் தபன் தேகா ஆகியோர் இருந்தனர்.

ராகுல் காந்தி

தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம்

பஹல்காம் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் காங்கிரஸின் ஜே&கே பிரிவுத் தலைவர் தாரிக் கர்ரா ஆகியோருடன் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி மற்றும் எங்கள் முழு ஆதரவு தேவை என்று அவர் X இல் ஒரு பதிவில் கூறினார். அதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் செவ்வாய்க்கிழமை இரவு அமித் ஷாவிடம் பேசியதாக கூறினார். யங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அமெரிக்கா மற்றும் பெருவுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தை குறைத்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளார். நிர்மலா சீதாராமன் ஆறு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்றுள்ளார்.