தொடர்ந்து பெய்து வரும் கனமழை; எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இன்று, டிசம்பர் 2ஆம் தேதி, பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், கோத்தகிரி தாலுகா பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. அதேபோல நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு ஆகிய 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை. கனமழை பெய்து வரும் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
Twitter Post
இன்று காலை 10 மாவட்டங்களில் மிதமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை வானிலை மையம் இன்று, டிசம்பர் 2ஆம் தேதி காலை 10 மணி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. அதேபோல நாளை, டிசம்பர் 3ஆம் தேதி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் மற்றும் நாளையும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒருசில இடங்களில் மிதமான மழை, இடி, மின்னலுடன் பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.