2023 Year Roundup- முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்த 2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு வசூல், வெற்றி படங்கள், விருதுகள், இயக்குநர்களுக்கு திருப்புமுனை என அனைவருக்கும் சிறப்பான ஆண்டாகவே அமைந்தது.
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பெரிய ஹீரோக்கள் நடிப்பில் வெளியான படங்களும், குறைந்த பட்ஜெட்டில் புதுமுக இயக்குனர்கள் இயக்கிய படங்களும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றன.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ரஜினி, விஜய் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியான நிலையில், முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய டாப் 5 தமிழ் திரைப்படங்களை பார்க்கலாம்.
2nd card
லியோ
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக விஜய் உடன் லியோ திரைப்படத்திற்காக இணைந்தார். வழக்கமாக விஜய் திரைப்படத்திற்கு படம் அறிவிக்கப்பட்டது முதல் வெளியாகும் வரை, எழும் அனைத்து சர்ச்சைகளும் இப்படத்திற்கும் எழுந்தன.
இருப்பினும், அவை அனைத்தையும் படம் செய்த வசூல் சாதனை மறக்க செய்தது. உலக அளவில் ₹600 கோடிக்கு மேல் படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், முதல் நாளில் மட்டும் ₹148 கோடிக்கு மேல் இப்படம் அள்ளியது.
3rd card
ஜெயிலர்
இயக்குனர் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்த ஜெயிலர் திரைப்படம், மீண்டும் ஒருமுறை ரஜினியின் மாசை நிரூபித்தது.
இப்படம் செய்த வசூலை சாதனையை, இதற்கு பின்னால் வெளியான படங்கள் முறியடிக்குமா என எழுந்த விவாதங்கள் இப்படத்தின் வசூலுக்கு சாட்சி.
படம் உலக அளவில் ₹650 கோடிக்கு மேல் சம்பாதித்தது. இருப்பினும், லியோவின் முதல் நாள் வசூலை இப்படம் முறியடிக்கவில்லை.
உலக அளவில் ஜெயிலர் முதல் நாளில் ₹95 கோடிக்கு மேல் கல்லா கட்டியது.
4th card
பொன்னியின் செல்வன் 2
எம்ஜிஆர் தொடங்கி பலரும் முயன்று சாதிக்க முடியாததை, இயக்குனர் மணிரத்தினம் ஒரு முறை அல்ல இருமுறை, பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கியதன் மூலம் சாதித்து விட்டார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றி இரண்டாவது பாகத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், படம் முதல் பாகத்தின் அளவிற்கு இல்லை என கூறப்பட்டது.
இருப்பினும் இப்படம் முதல் நாளில், உலக அளவில் ₹60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5th card
வாரிசு
தமிழ் சினிமா தொடர்புடைய பெரும்பான்மையானவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்த நிலையில், நடிகர் விஜய்க்கு கூடுதல் சிறப்பாக அமைந்து.
நீண்ட நாட்களுக்கு பிறகு அவரின் இரு படங்கள் ஒரே ஆண்டில் வெளியான நிலையில், இருபடங்களும் வசூல் வேட்டை நிகழ்த்தின.
பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம், முதல் நாளில் ₹47 கோடிக்கு மேல் வசூல் செய்தது, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்தது.
6th card
துணிவு
எச் வினோத்- அஜித் கூட்டணியில் உருவான இரண்டாவது படம் துணிவு. சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின், விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் பொங்கலுக்கு ஒன்றாக மோதின.
இரு திரைப்படங்களில் எது அதிக வசூல் செய்தது என, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இன்றளவும் மோதிக் கொள்ளும் நிலையில், முதல் நாளில் படம் வாரிசு திரைப்படத்தை விட ₹5 கோடி குறைவாக, ₹42 கோடிக்கு வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.