மணிலா ஆசியான் மற்றும் குவாட் மாநாடு: உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய இந்திய பாரம்பரியப் பரிசுகளின் முழுப் பட்டியல்
செய்தி முன்னோட்டம்
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23-வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு மற்றும் குவாட் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை டெல்லி திரும்பினார். இந்த மாநாடுகளின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய கைவினை கலையை பறைசாற்றும் விதமாக பிரதமர் மோடி அரிய பரிசுப் பொருட்களை வழங்கினார்.
முழுப் பட்டியல்
உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளின் முழுப் பட்டியல்
டொனால்ட் டிரம்ப்: தங்க பிச்வாய் ஓவியம்- ராஜஸ்தானின் நத்வாரா பாரம்பரியத் துணி ஓவியம்.
பிரபோவோ சுபியாண்டோ(இந்தோனேசிய அதிபர்): சோழர் கால வெண்கலச் சிற்பம்- தமிழகத்தின் பாரம்பரிய மெழுகு வார்ப்பு நுட்பத்தில் கையால் செதுக்கப்பட்ட சிற்பம்.
சனே தகைச்சி (ஜப்பான் பிரதமர் ): ராயல் ப்ளூ பனாரசி கதான் பட்டுத் துணி- சதேலி பெட்டியில் வைக்கப்பட்ட வாரணாசியின் பழமையான நெசவுக் கலை.
அந்தோனி அல்பானீஸ்(ஆஸ்திரேலிய பிரதமர்): ஜெய்ப்பூர் நீல மண்பாண்டக் கலைப்பொருள்- ராஜஸ்தானின் பளபளப்பான வெள்ளை மேற்பரப்பில் கோபால்ட்-நீல மலர், பறவை வடிவங்கள்.
பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர்(பிலிப்பைன்ஸ் அதிபர்): காஷ்மீரி பட்டு கம்பளம்- உயர்தர பட்டு நூலால் கைவினைஞர்களால் நெய்யப்பட்ட நுணுக்கமான வடிவமைப்பு
சர்வதேச அங்கீகாரம்
இந்தியக் கைவினை கலைக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
இது தவிர, காஷ்மீரி பஷ்மினா சால்வை, ரோஸ் குவார்ட்ஸ் யானை, பித்ரிவேர் வெள்ளிப் பூஜாடிகள், டோக்ரா கலைப் படகு, வெள்ளி உருளி, ரோகன் கலை ஓவியம் மற்றும் ரோகன் கலை ஓவியம் ஆகியவையும் உலக தலைவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
மணிலாவில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருடன் இணைந்து பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தார்.
இதற்கிடையே, ஒவ்வொரு நாட்டின் தலைவருக்கும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களின் பாரம்பரியக் கலைப் பொக்கிஷங்களைப் பிரதமர் மோடி தேர்வு செய்து வழங்கியது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Prime Minister Narendra Modi gifted a Golden Pichwaai painting from Nathdwara, Rajasthan, to US President Donald Trump during his visit to Manila, Philippines.
— ANI (@ANI) November 18, 2026
Originating in Nathdwara, the traditional cloth-painting art is known for its intricate detailing, luminous colours,… pic.twitter.com/vKl6WLvGLW