Loading...
ஹாஃபிஸ் சயீத் குறித்த கேள்விகள்: ஐ.நா சபையில் பதிலளிக்காமல் ஓட்டம் பிடித்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்
ஐ.நா சபையில் பதிலளிக்காமல் ஓட்டம் பிடித்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்

ஹாஃபிஸ் சயீத் குறித்த கேள்விகள்: ஐ.நா சபையில் பதிலளிக்காமல் ஓட்டம் பிடித்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2026
10:43 am

செய்தி முன்னோட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பயங்கரவாதி ஹாஃபிஸ் சயீத் மற்றும் பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிப்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்த்துச் சென்றுள்ளார். ஐ.நா தலைமையகத்திற்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வருகை தந்தபோது, "பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதை எப்போது நிறுத்தும்?" என்று ANI செய்தி நிறுவன நிருபர் நேரடியாக கேள்வி எழுப்பினார். ஆனால், இக்கேள்விக்கு பதிலளிக்காத ஷெரீப் மௌனமாக சென்றார். பின்னர் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறியபோதும், "லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹாஃபிஸ் சயீத் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?" என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

யார் இந்த ஹஃபிஸ் சயீத்?

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதியாளரான ஹஃபிஸ் சயீத், இந்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்.

மேலும், கடந்த 2025 ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (NIA) தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் ஹாஃபிஸ் சயீத் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்தியா

ஐ.நா-வில் இந்தியா வைத்த காட்டமான விமர்சனம்

இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்திய ராஜதந்திரி க்ஷிதிஜ் தியாகி பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

"பாகிஸ்தான் பிற நாடுகளின் நிலங்களை கைப்பற்றுவதையும், எல்லையோர பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதையும் நிறுத்திவிட்டு, நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்".

"பாகிஸ்தானின் நாடகங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள், அந்நாடு தனது பொருளாதாரத்தைக் காப்பாற்ற வாங்கிய கடன்களை அடைக்க உதவாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும், அத்தியாவசிய பொருட்கள் முடக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சர்வதேசத்தின் கண்காணிப்பிற்குத் தகுதியான ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே" என்று அவர் சாடினார்.

ADVERTISEMENT