NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / புரோ கபடி லீக் : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs புனேரி பல்தான் முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புரோ கபடி லீக் : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs புனேரி பல்தான் முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்
    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs புனேரி பல்தான் முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்

    புரோ கபடி லீக் : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs புனேரி பல்தான் முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 04, 2023
    04:06 pm

    செய்தி முன்னோட்டம்

    புரோ கபடி லீக் பத்தாவது சீசனின் 5வது ஆட்டத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 4) அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டாண்டியா அரங்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன் புனேரி பல்தான் அணி மோத உள்ளது.

    இந்த சீசனில் இரு அணிகளுக்கும் இது முதல் போட்டி என்பதால் வெற்றியுடன் இரு அணிகளும் வெற்றியுடன் சீசனை தொடங்குவதற்கான முனைப்பில் உள்ளன.

    முந்தைய சீசனின் வெற்றியாளரான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு, கடந்த முறை கேப்டன் பொறுப்பை வகித்த சுனில் குமார் மீண்டும் கேப்டனாக செயல்பட உள்ளார்.

    மறுபுறம், புனேரி பல்தான் அணியில் தற்போதுள்ள வீரர்களின் ஃபார்மைக் கருத்தில் கொண்டு வெற்றியை எதிர்பார்க்கிறது.

    Jaipur Pink Panthers vs Puneri Paltan Head to Head Stats

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs புனேரி பல்தான் நேருக்கு நேர் புள்ளிவிபரம்

    முந்தைய சீசன்களில் புனேரி பல்தான் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

    அதில் 11 முறை புனேரி பல்தான் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. மறுபுறம், நடப்பு சாம்பியனாக இருந்தாலும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் புனேரி பல்தானை விட வெற்றிகளின் அடிப்படையில் சற்று பின்தங்கியே உள்ளது.

    புனேரி பல்தான் அணியில் அஸ்லாம் இனாம்தார் கவனிக்க வேண்டிய முக்கிய வீரராக இருப்பார்.

    இந்த ஆண்டு புனேரி பல்தானை வழிநடத்தும் பணி இளம் வயது அஸ்லாம் இனாம்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மறுபுறம் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்காக சுனில் குமார் இந்த போட்டியில் பெரிய பங்கை வகிப்பார்.

    மேலும் டிஃபெண்டரின் திறமை போட்டியின் தலைவிதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

    Jaipur Pink Panthers vs Puneri Paltan Starting 7 Where to watch

    தொடக்க 7, போட்டி நடைபெறும் இடம், நேரம் மற்றும் நேரடி ஒளிபரப்பு விபரங்கள்

    இரு அணிகளின் தொடக்க 7 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    புனேரி பல்தான் : அஸ்லாம் இனாம்தார் (கேப்டன்), மோஹித் கோயத், ஆகாஷ் ஷிண்டே, முகமதுரேசா ஷட்லூயி சியானே, கௌரவ் காத்ரி, அபினேஷ் நடராஜன், சங்கேத் சாவந்த்.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் : சுனில் குமார் (கேப்டன்), அர்ஜுன் தேஷ்வால், வி அஜித் குமார், அங்குஷ், சாஹுல் குமார், ரேசா மிர்பாகேரி மற்றும் ராகுல் சவுதாரி.

    அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டாண்டியா அரங்கில் திங்கட்கிழமை (டிசம்பர் 4) இரவு 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

    மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியிலும், டிஸ்னி+ஹாட்ஸ்டாரிலும் போட்டியை நேரலையில் காணலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புரோ கபடி லீக்
    கபடி போட்டி

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    புரோ கபடி லீக்

    புரோ கபடி லீக் சீசன் 10க்கான வீரர்கள் ஏல தேதி அறிவிப்பு கபடி போட்டி
    டிசம்பர் 2 முதல் தொடங்குகிறது பத்தாவது புரோ கபடி லீக் கபடி போட்டி
    ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் ஒத்திவைப்பு கபடி போட்டி
    புரோ கபடி லீக் சீசன் 10க்கான புதுப்பிக்கப்பட்ட ஏல தேதி அறிவிப்பு கபடி போட்டி

    கபடி போட்டி

    ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி முதல் நாள் போட்டிகளில் அபார வெற்றி ஆசிய சாம்பியன்ஷிப்
    ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி ஆசிய சாம்பியன்ஷிப்
    ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் எட்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்தியா இந்திய கபடி அணி
    "கோ-கோ பாதி, கபடி பாதி" : இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு அட்யா பட்யா பற்றி தெரியுமா? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025