புரோ கபடி லீக் சீசன் 10க்கான புதுப்பிக்கப்பட்ட ஏல தேதி அறிவிப்பு
புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 10 வீரர்கள் ஏலம் அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும் என்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வீரர்கள் ஏலம் முதலில் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த மாத இறுதியில் தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கபடி அணியின் பயிற்சியைக் கருத்தில் கொண்டு ஏலம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிகேஎல் சீசன் 10 ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள். பிரிவுகள் ஏ, பி, சி மற்றும் டி மற்றும் வீரர்கள் ஆல்-ரவுண்டர்கள், டிஃபென்டர்கள் மற்றும் ரைடர்கள் என பிரிக்கப்படுவார்கள்.
வீரர்களுக்கான ஏலத் தொகை
கபடி வீரர்களுக்கான அடிப்படை ஏல விலை ஏ பிரிவுக்கு ரூ. 30 லட்சம், பி பிரிவுக்கு ரூ. 20 லட்சம், சி பிரிவுக்கு ரூ. 13 லட்சம், மற்றும் டி பிரிவுக்கு ரூ. 9 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீசன் 10 வீரர்கள் குழுவில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ள நிலையில், 2023 கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ் 2023 இன் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இரண்டு அணிகளைச் சேர்ந்த 24 வீரர்களும் ஏலத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு அணி உரிமையாளருக்கும் சம்பள பர்ஸ் ரூ. 5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 84 வீரர்கள் முந்தைய சீசனில் விளையாடிய அணிகளால் தக்கவைக்கப்பட்டனர்.