டிசம்பர் 2 முதல் தொடங்குகிறது பத்தாவது புரோ கபடி லீக்
புரோ கபடி லீக்கின் (பிகேஎல்) 10வது சீசன் 12 நகர கேரவன் வடிவத்தில் விளையாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது டிசம்பர் 2, 2023 அன்று தொடங்க உள்ளது. புரோ லீக் கமிஷனர் அனுபம் கோஸ்வாமி, வரவிருக்கும் பத்தாவது சீசன் குறித்த அறிவிப்பை வியாழக்கிழமை (ஆகஸ்ட்17) வெளியிட்டார். மேலும் புரோ கபடியின் எக்ஸ் பக்கத்திலும் இது குறித்த காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பத்தாவது சீசனுக்கான ஏலம் செப்டம்பர் 8,9களில் மும்பையில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் அதன் முந்தைய சீசன் அணியில் இருந்து ஆறு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய சீஸனில் பவன் குமார் செராவத் ரூ.2.26 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதுதான் ஒரு வீரர் பெற்ற உச்சபட்ச தொகையாகும்.