LOADING...
ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 29, 2023
06:13 pm

செய்தி முன்னோட்டம்

தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்தியா ஈரானை 33-28 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றது. முன்னதாக, இந்திய கபடி அணி தென்கொரியா, சீன தைபே மற்றும் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், தற்போது தனது கடைசி லீக் போட்டியில் ஈரானை தோற்கடித்துள்ளது. இந்தியா இதுவரை எந்த தோல்வியையும் சந்திக்காத நிலையில், ஈரானுக்கு இது முதல் தோல்வியாகும். இதையடுத்து ஜூன் 30 ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் ஜப்பான் அல்லது ஈரானுடன் மோத வாய்ப்புள்ளது. முன்னதாக, கடந்த 2017இல் நடந்த கடைசி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்திய கபடி அணியே கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ஈரானை வீழ்த்தியது இந்திய கபடி அணி