ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் எட்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்தியா
இந்திய கபடி அணி தென்கொரியாவின் பூசானில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் 2023 இன் இறுதிப் போட்டியில் கபடியில் தனது பரம எதிரியான ஈரானை 42-32 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்துள்ளது. இதன் மூலம் எட்டாவது முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை பவன் செஹ்ராவத் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்தது. முன்னதாக, 2017இல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி 2018இல் அரையிறுதியில் ஈரானிடம் தோல்வியடைந்தது. இது தான் இந்திய அணி ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்காத ஒரு போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த தோல்விக்கு பழிதீர்ப்பது போல் தற்போது இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.