LOADING...
LPG to PNG: மத்திய அரசின் அதிரடி மாற்றம் ஏன்? முக்கிய விளக்கங்கள்!
இந்தியா தனது எரிசக்தி கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது

LPG to PNG: மத்திய அரசின் அதிரடி மாற்றம் ஏன்? முக்கிய விளக்கங்கள்!

எழுதியவர் Vasuki Ravichandran
Mar 26, 2026
01:38 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் (ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே) நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை காரணமாக, இந்தியா தனது எரிசக்தி கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் எல்பிஜி (LPG) சிலிண்டர்களை விட, உள்நாட்டிலேயே விநியோகிக்கப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயுவை (PNG) ஊக்குவிக்க 5 முக்கியக் காரணங்களை அரசு முன்வைத்துள்ளது. இதற்காக 'சிவப்பு நாடா' முறை அதாவது, அரசாங்க நிர்வாகத்தில் தேவையற்ற, கடினமான விதிமுறைகளால் ஏற்படும் காலதாமதத்தை குறைத்து, குழாய் அமைக்கும் பணிகளை வேகப்படுத்த புதிய சட்டக் கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை

பிஎன்ஜி (PNG) குழாய் எரிவாயுவிற்கான - 5 முக்கியக் காரணங்கள்!

எரிசக்தி பாதுகாப்பு: கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும்போது சிலிண்டர் விநியோகம் முடங்குகிறது. ஆனால், குழாய் வழி சுற்றுச்சூழல்சுற்றுச்சூழல் (PNG) பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆதாரங்களில் இருந்து தொடர்ந்து வழங்கப்படுவதால், போர் போன்ற காலங்களிலும் தடையின்றி எரிபொருள் கிடைக்கும். விலைக் குறைவு: சிலிண்டர் கொண்டு செல்லுதல், விநியோகஸ்தர் கமிஷன் போன்ற செலவுகள் பிஎன்ஜி-யில் கிடையாது. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் எல்பிஜியை விட பிஎன்ஜி 30% முதல் 40% வரை மலிவாகக் கிடைக்கிறது. தடையற்ற விநியோகம் மற்றும் பாதுகாப்பு: சிலிண்டர் தீர்ந்துவிடும் என்ற கவலை இனி இல்லை; முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. மேலும், சமையலறையில் அதிக அழுத்தம் கொண்ட சிலிண்டர்களைச் சேமித்து வைப்பதை விட குழாய் எரிவாயு பாதுகாப்பானது.

ஏன் இந்த மாற்றம்?

எல்பிஜி இறக்குமதி குறையும்

நிர்வாகத் தடைகள் நீக்கம்: குடியிருப்பு சங்கங்கள், வீட்டு வசதி வாரியங்களில் எரிவாயு குழாய் பதிப்பதைத் தடுக்க முடியாது. அனுமதி பெற இருந்த சிக்கலான நடைமுறைகளை அரசு ரத்து செய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு: நிலக்கரி, விறகு அடுப்புகளை விடவும், எல்பிஜியை விடவும் இயற்கை எரிவாயு தூய்மையானது. மாசுவைக் குறைப்பதற்கான இந்தியாவின் இலக்கிற்கு வலுசேர்க்கும். இறக்குமதி குறையும் குழாய் எரிவாயு கட்டமைப்பு வலுவாக இருந்தால், வளைகுடா நாடுகளை மட்டும் நம்பியிருக்காமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியும். சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து எல்பிஜி சிலிண்டர்களை வாங்கும் தேவையைக் குறைக்கும். கிராமப்புறங்களில் குழாய் அமைப்பது கடினம் என்பதால், எல்பிஜி சிலிண்டர்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்.

Advertisement